Saturday, February 8, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தட்டிக் கொடுத்தால் 

எட்டிப் பிடிக்கலாம் வாழ்வை

வட்டியும் முதலுமாய்

விட்டதை பிடித்தே!

ஆட்டியும் படைக்கலாம் உலகை அதுவும்

இட்டு செல்லும் உயர்நிலை நோக்கி!

ஊட்டி வளர்த்த தாயும் மகிழ்வாள் உன்னிலைக் கண்டு

வெட்டி சென்ற உறவுகளும் 

ஒட்டிக் கொள்ளும் மெதுவாய்

கட்டி இழுத்தாலும் வாராது என்று சொன்னவையும் இன்று

உன் பின்னால்!

ஓட்டிய நாட்கள் யாவும் வீணல்ல

தட்டி அடக்கி திருத்திய சினேகமும் 

உன்னைக்

காட்டி காட்டி பெருமைக் கொள்ளும்!

குட்டி குட்டி சோதனைகளும்

கூட்டி வைக்கும் உனக்கான அனுபவத்தை

கெட்டவை யாவும் தகர்ந்து போகும் எண்ணத்தில் உயர்ந்து நிற்க

கேட்டவை எல்லாம் கிடைக்க

கைகட்டி நிற்கவே பழகு!

கொட்டி கொடுத்தாலும் திரும்பாது இந்த தருணம்

Vidhya, 

அடி உன்னால் முடிந்த வரை

 முயற்சி செய்!

பயிற்சி இல்லா களம் தோல்வியே

முயன்ற வரை பலத்தைக்

 கொண்டு விளையாடு 

ஊர் திரும்பி பார்க்க வெற்றி

 நடை போடு!

தோல்வியோ! வெற்றியோ!

ஆனால் ஒரு நாளும் முயற்சிக்க

 மறக்காதே!



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...