Wednesday, February 5, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

குப்பைக் கிளறி உண்டது மாறி

மாடி வீட்டில் இலையில் சோறு

கூடியிருந்த கூட்டம் கலைந்தது

தனித்தே உண்டது

புது வகை உணவுகளால் 

மாற்றி விட்டான் மனிதன் காகைகளையும்

மொட்டைமாடியில் நிலா சோறு உண்டவன் இன்று

உணவகங்களில், 

காகையும் இடம் மாற்ற கூடும்

உணவகங்களுக்கு

விரைவில் மாற்றம் வேண்டி

சுவை வேண்டி

என்றால் மனிதனின்

அடுத்த இடமும் எதுவோ?

 Veena Shankar: 

சுவையறிந்து உண்பேனா?

கண் சுருக்கி நோட்டமிட்டு உண்பேனா?

குஞ்சுகளின் பசிக்காக உண்பேனா?

மூதாதையரின் ஆசிக்காக உண்பேனா? 

படைத்ததற்காக உண்பேனா?

இனி கிடைக்காமல் போகுமோ என்று உண்பேனா?

நான் உண்டு என் இனமும் உண்ண வேண்டும் என்று நினைப்பேனா?

நான் கரையாமல் உண்டால் நான்

 உண்டது கரையாமல் போகுமோ

என்ற அச்சத்தில் உண்பேனா?

யாருக்கான உணவு இது என்ற நினைப்பில் உண்பேனா?

படைத்தவன் புசிக்கும் முன் எனக்கு படைத்ததால் உண்பேனா?

படைக்கும் உணவினை என் உடம்பு பெருக்காமல் உண்பேனா?

உண்ணும் உணவில் அர்த்தங்கள் பல

அவை

பசிக்காக

தேவைக்காக

உணர்வுக்காக

என்பதையும் நீ அறியாயோ?

Vidhya:

அட வடையும்,அப்பளமும் 

காணோமே!

தண்ணியும் வைக்கவில்லை,

அடுத்த முறை இதெல்லாம்

 இல்லை என்றால் ஸ்ட்ரைக் 

 பண்ண சொல்லி நம்ம

 சங்கத்துல சொல்லனும்..

நாங்க எவ்வளவு பிஸி

உங்க இஷ்டப்படி வைச்சா என்ன?

டேஸ்டாக இருப்பதால்

 பரவில்லை!

நன்றி ,மீண்டும் வருவேன்!

வடை இல்லாத உணவும்

காக்கா இல்லாத விருந்தும்

 உண்டா!

அழைக்காத  விருந்தாளி

 தேவையற்ற போது

அழைத்தாலும் வரமாட்டோம்

 உங்கள் தேவைக்கு,

எங்கள் சேவை உங்களுக்கு

 தேவை ,புல் பூண்டு முளைக்க ...



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...