Tuesday, February 25, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



Veena Shankar: 

மண்ணில் இட்ட 

விதை துளிர்ப்பதும்

துளிர்த்தது செடியாவதும்

செடியாகி அதனூடே 

சிறு மொட்டுக்கள் உருவாவதும் 

அந்த மொட்டும் மலர்ந்து மலராவதும்

மலர்ந்த பின் காயாவதும்

காயும் பின்னே கனியாவதும்

கனியும் பிறர் உண்ண உணவாவதும்

உணவான பின்

வயிறு நிரம்ப

அப்பொழுது கிடைக்கும் ஆனந்தம் 

ஒன்றே நிலையானது

அன்றி

அந்த மண்ணில் புதைந்த விதையின் தியாகத்தை நாம் மறப்பது இயல்பே!

அதை வளரும் 

விதையும் அறியாது

அதுவும் சிறப்பே!

Veena Shankar:

 எதுவும் வீழ்ந்தால் மட்டுமே

துளிர்க்கும்

அது விதையானாலும் சரி

நான் பெறப் போகும்

வெற்றியானாலும் சரி

Vidhya:

மண்ணில் விழும் ஒவ்வொரு

 விதையும் முளைக்கவே

 விளைகின்றன ..

முளைத்தது மண்ணில் வேரூன்றி

 நிற்க தக்க சூழ்நிலையும், அதன்

 முயற்சியுமே சிறந்த உரம்..

உரமற்ற தரிசு நிலத்தில்

 முளைத்தும் என்ன பயன்!


யாருக்கு தெரியும் ஒரு நாள் பல

 குருவிகள் கூடு கட்டும் உன்

தோளில்,பலர் உறங்குவர் உன்

 மடியில்,உன் கையில் தொங்கி

 விளையாடும் குரங்குகளும்,

ஊஞ்சல் ஆடும் சிறார்

 கூட்டமும் இதன் நடுவே  தோகை

 விரித்து ஆடும் உன்

 கூந்தலும்,வண்டு வந்து மோதும்

 பொன்னிற பூக்களும்,

அணிலும்,கிளியும் பந்தாடும்

 பழங்களை சுமக்கும்

 சொர்க்கமாக மாறுவாய் என்று!





No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...