Thursday, February 13, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar: 

வெவ்வேறு இடங்கள் நோக்கி பயணம்

உடன் வெவ்வேறு சிந்தனையுடன் 

வெவ்வேறு கவலைகளை சுமந்து

Veena Shankar: 

துணைகள் எதிரெதிர் பக்கம் பயணித்தால் மட்டும் என்ன

பயணம் வேறாகுமா?

கிளைகள் உடைந்த பின் துளிர்க்கும் தாவரத்தின் வேராகுமா?

வேரும் வேறாகாமல் இருப்பது தாவரத்தின் குணமே!

 Veena Shankar: 

சிந்தனை கொள்ளும் போது 

அங்கே முகங்கள் தெரிவதில்லை

முகங்கள் தெரியும் போது 

அங்கே குற்றங்கள் ஏதும் மறைக்கப்படுவதில்லை

குற்றங்கள் வெளிப்படும் போது 

அங்கே ஏதும் காப்பதில்லை

Vidhya, 

கனவுகளை நோக்கிய பயணம்!

ஓடி வந்து வண்டியை பிடித்த

 களைப்பு ..

நாளைக்கு வீட்டு சாப்பாடு..

ரயிலோடு உறவாட, மனதோடு

 வருடும் நினைவுகள்..

உங்களுடைய கடைசி ரயில்

 பயணத்தை நினைத்து பார்க்க 

கூடும் உற்சாகம், எப்போதும்

 ரயிலின் குரலோடு,மோதி

 விளையாடும் குரல்கள்,அதில்

சுவையானது உணவு

 பண்டங்களை விற்பவரின்

 குரல்,கேட்டவுடன் பசியை

 தூண்டும்,அனைவரும் உறங்கும்

 நேரத்தில் உறங்கா இரயிலின்

 கீதம் டடக்..டக் ட..டக் என தாலாட்ட 

கூடவே குறட்டை கைக்கோர்க்க,

 விடிந்தால் பலரின் பயணத்தை

 நினைவாக்கும் ரயில் வண்டி!!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...