Veena,
ஒவ்வொரு கட்டமாய் நகர
வெற்றி என்றும் நமதே
இணை பிரியா தாயக்கட்டையும்
இணைந்தே பயணிக்கும் காய்களும்
காட்டும் பாதை எதுவோ?
நிழல் தரும் மரங்கள் போலே
அங்கங்கே சொந்த கூடாரமுண்டு பயணத்தில்
வெட்டுபவர் எவரோ?
வீழ்பவர் எவரோ? யாருமறியார்
துள்ளி துள்ளி நகர்ந்து இல்லம் அடைந்தவுடன்
கூடவே இறுமாப்பு கொள்ளுமே மனதும்
Vidhya,
எத்தனையோ விளையாட்டு
வந்தாலும் என்றும் அழியாத தாய
விளையாட்டு,
பிறரை வெட்டி,வெட்டுப்பட்டு
மேலே செல்ல ,கடைசியில்
தாயத்திற்கு காத்திருக்க,பின்னே
வருவர் முன்னே செல்ல
வெற்றியை கணிக்க முடியாத
விளையாட்டு..
விளையாட்டு என்று பந்தயம்
ஆனதோ அன்றே வினையும்
சேர,கள்ளம்கபடமற்ற மனதில்
போட்டி வந்து சேர
பொழுதுபோக்கு வியாபாரம்
ஆனதே!

No comments:
Post a Comment