Saturday, February 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

அணையா விளக்கே இவள்

நெருப்பைக் கூட நீராய்

மாற்றிடுவாள்

மாறும் கலையும் 

பிறரை மாற்றும் வித்தையும் அறிந்தவள் இவள்

உருகும் மெழுகு கூட

உறைந்து கிடக்கிறது 

இங்கே அவள் தம்

நளினமான நடனத்தால்

காற்றும் வெட்கியது அவள் தம் வனப்பான அசைவுகளை கண்டு

எவர் மயங்க இந்த நடனம்

 நீர் போர்வையில் மறைந்து

யார் அறிவர்?

அது அவள் தன் மனத்தின் கண் வழிந்த கண்ணீராய்

கூட இருக்கலாம்

விழியின் நீர் பிறர்

அறியாத போது 

அந்நீரும் ஆவியாகி விடுமே காற்றினால்

மெழுகின் நீரும் கடினமே

தான் செய்யும் தியாகத்தை எண்ணியே!

பாவை இவள் அங்ஙனமல்ல 

பொறுமையில் அறிவைக் கூட வென்றிடுவாள் 

பாதகம் யாருக்குமில்லை

இவள் நடனமும் கண்ணீரும்

ஓசைப்படாமல் வெளிப்படுவதால்

Veena Shankar: 

வண்ண வண்ண மெழுகில்

தன் வண்ணம் இழந்த சுடரும் 

காண்கையில் நீரூற்று போலே

உள்ளக் குமுறல்கள் 

வெளிப்பட 

கரையும் மெழுகும்

புனைகிறது வேறொரு உருவம்

தன் மனம் பெருக்கி

தன் உடல் சுருக்கி

இறுதியில் 

தன் இடம் தொலைத்து

உரைக்கிறது 

பண்பை இழக்காதே!

மலையென்றாலும் சரிவு உண்டு இயற்கையால் கொண்டதும் வீழும் 

போது 

செயற்கை மெழுகும் 

தீயினால் இழக்கும் தன் உடலை

Vidhya:

எதுவும் சாத்தியம் என்றால்

 இதுவும் நடக்கும்..

கொட்டும் மழைத்துளியை

 மெழுகுவர்த்தியும் கடன்

 வாங்கியது என்ன?

வெளிச்சம் கொடுத்தது போதும்

இங்கு ஈரமே தேவைப்படுகிறது!

ஒளி தர பல நுட்பங்கள்

 வந்துவிட்டன..

மழைக்கூட செயற்கையாக

 கொண்டுவர முடிகிறது.. ஆனால்

 வருவதை எங்கே

 நழுவவிடுகிறோம்!

தீயில் குளித்து உருகியது போதும்

 கொஞ்சம் மழையில் நனைந்து

 உறைகிறேன்!


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...