Saturday, February 15, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya



Veena Shankar: 

எத்தனை ஏணிகள் இருந்தாலும்

முயற்சி எடுத்து ஏறும் ஒருவனுக்கே

வாய்ப்புகளும் வெற்றியும் வசமாகும்

Veena Shankar:

 நின்று ஏறுவதால் தான் அது ஏணி

அதுவே படுத்துவிட்டால் வெறும் விறகே

 Veena Shankar: 

ஆள தெரிந்தவனுக்கு ஒரு படியும் போதும் மேலே ஏற

அதன் பயன் தெரியாதவனுக்கு ஆணிகள் பல கொண்டாலும் வீணே!

 Veena Shankar: 

ஏறி மிதிபட ஏணியென்றாலும்

இலக்கை அடைய நம்பிக்கை தருவதும் அதுவே!

 தாங்கும் இதயமும் அதுவே!

எட்டி விட நினைத்தால் நாமும்

அந்தரத்தில்

ஆகவே

நாம் பிறருக்கும் ஏணியாய் இருக்க வேண்டும் 

தாங்க மட்டும் அல்ல

தவிக்கவும் விட


Vidhya:

எத்தனை ஏணிகள் இருந்தும்

 என்ன பயன்?

 அதை எப்படி பயன்படுத்த

 வேண்டும் என்ற அனுபவம்

 வேண்டும்..

அதில் தானும் ஏறி, பிறருக்கும்

 வழிகாட்டி,ஒரு புது சமூகத்தை

 நெறிப்படுத்த முடியும்..

எத்தனை பட்டங்கள் பெற்றும்

எத்தனை வீடுகள் கட்டியும்

பிறருக்கு பயன் இல்லையேல் 

அது பயனற்றது!

கொடுக்க கொடுக்க வளரும்

 செல்வங்கள் அவை,அதற்கு

 அனுபவ அறிவும் தேவை!

கல்வி அறிவுயில்லா, கேள்வி

 அறிவு மிக்க,குடிசையில்

 வாழும் எளியவரே வலியவர் !


அது வெரும் மரங்கள் அல்ல 

அனுபவம் வாய்ந்த மனிதர்கள் 

அவர்களை நீ சரியாக 

பயன்படுத்தாவிட்டால் 

படித்தும் நல்ல உடை உடுத்தியும் 

பயனில்லை  

புலப்படவேண்டியது எல்லம் 

தெரியாது 


-பிரியா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...