Tuesday, February 4, 2025

படமும் கருத்தும் by Winmeengal

 


Veena Shankar: 

விழியிருந்தும் காணாது யாவும்

 நல்லவை அல்லாது

 Veena Shankar: 

முகம் மறைக்க முகமூடி உண்டு

அகம் சுருக்க யாது உண்டு

Veena Shankar: 

அவள் கெண்டை விழி கண்டால்

நான் நிலைகுலைந்து போவேன் என்றோ

அவளும் தன் விழி மறைத்தாள்

இல்லை இல்லை அவள் விழி

அவளிடம் இல்லை

தேவனிடம் தான் உண்டு

அதை மறைக்க எண்ணியே இந்த தொப்பியின் பிரவேசம் இங்கே தலையில்

அவளுக்கு கிரீடமாய்

Veena Shankar: 

வேடங்கள் போட தெரியா நேரத்தில்

நம்மை நாம் மறைக்க இந்த தொப்பியும் தேவையே!

ஒவ்வோர் தொப்பிக்கும் தன்னை தான் மாற்றிக் கொண்டதாகவும் ஓர் உணர்வு

Vidhya 

கருமையின் அழகே கருணை

கருப்பு வெள்ளை என்றும் அழகே

கார்கூந்தல் என்ன செய்ய

 அதுவும் தலை குனிந்தது

 கருமையின் முன்னே!



ஏ ஐ கண்ணில் பட்டால் 

உன் கருங்கூந்தலுக்கு  

வர்ணம் பூசி 

உதட்டுக்கு சாயமிட்டு 

உனக்கு மெருகேத்தி 

உலக அளவில் உலவ விடும் 


--பிரியா


சற்று நேரம் முன்பு -

விழி மூடி கொண்டு..

நிம்மதியை கொள்ளை கொண்ட ..

அழகு புத்தரை கண்டு தான் ...

இவளும் ..

முயற்சிக்கிறாளோ...!?...

- Kiruthika 


  


  

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...