Saturday, February 1, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar:

 நிமிர்ந்தது அவன் பரிணாம வளர்ச்சி மட்டுமல்ல

அவன் நடையில் வாழ்வாதாரமும் தான்

Veena Shankar: 

யார் இவர்கள்?

ஆதியிலும் அந்தத்திலும் கையில் கோல் இல்லாமல்

பழைய நடைமுறை திரும்ப வருகிறதா?

நாகரீகத்தின் வெளிப்பாடாக

 Veena Shankar:

 பரிமாண வளர்ச்சியின் பாதை இங்கே

அதன் முடிவு தான் எங்கே?

நடை தளர்த்தியவன் 

 இங்கே

அதை உருவாக்கியவன் எங்கே?

வெள்ளேந்தியான மனிதன் இங்கே

அதை தளர்த்தியவன் எங்கே ?

பசிக்காக வேட்டையாடியவன் இங்கே

அதை வியாபாரமாக்கியவன் எங்கே?

Veena Shankar: 

முன்னோக்கி பார்த்தால் மனிதனின் வளர்ச்சி

அதையே பின்னோக்கி பார்த்தால் அது அவனின் தளர்ச்சி

Vidhya, 

மனிதன் மாறிவிட்டான் 

உடலில்,நடையில்,பழக்க

 வழக்கத்தில் ஆனால் குணத்தில்

 இன்னும் கேள்விகுறியே?


பிறந்தேன் ,வளர்ந்தேன்

கண்டேன் ,கொண்டேன்

நடந்தேன் , நிமிர்ந்தேன்

சந்தித்தேன், சிந்தித்தேன்

கற்றேன்,தெளிந்தேன் 

வென்றேன்,அடைந்தேன்

கொன்றேன்,பிறந்தேன்





No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...