Friday, February 7, 2025

சிலர் by Veena Shankar

 


சிலர்


சிலரை தவிர்க்க வேண்டும் 

சிலரை தாங்கி நிற்க வேண்டும் 

சிலரை நினைவு கொள்ள வேண்டும்

சிலரை மறக்க வேண்டும் 

சிலரை வெறுக்க வேண்டும்

சிலரை நேசிக்க வேண்டும் 

சிலரை தொலைவுபடுத்த வேண்டும்

சிலரை பக்கத்தில் கொள்ள வேண்டும்

சிலரை மகிழ்விக்க வேண்டும்

சிலரை துகிலுறிக்க வேண்டும்

சிலரை மேம்படுத்த வேண்டும்

சிலரை கற்பனையில் கொள்ள வேண்டும்


அந்த சிலரும் நம்முடன் பயணிப்பர் நினைவால் என்றும்


 சாலையில் கண்டேன் ஓர்

சிலை - அதன் அழகு கண்டேன்

சேலையில் - அதுவோ பூக்களின் 

சோலை - அது போல் கடையில்

வலை வீசி தேடினேன்

விலை கேட்டே சென்றேன் - அதுவே

வேலையாகி போக 

வாலை சுருட்டிக் கொண்டு வருமாறு பணித்தார் என் கணவர்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...