Monday, February 10, 2025

படமும் கருத்தும் by Vidhya and Vidhya

 


Veena:

யாவிற்கும் அடைக்கலம் உண்டு குழியிலே!

இல்லாற்கு கொடுத்து ஈவதும் பண்பே!

வெறுமை கொண்ட குழியும் நிரம்பும் பகிர்வதாலே!

வெற்றிடத்தை தொடரும் போது கூட புதயலும் கிடைக்க வாய்ப்புள்ளதே!

இருவர் விளையாடும் ஆட்டத்தில் 

அறியாதார் வீழ்வர் இழப்பாலே!

கணிதமும் கூட கவனமாய் இங்கே

அரங்கேறும் ஓர் வித்தையே!

Vidhya, 

கையுக்கும் மூளைக்கும் ஒரே

 நேரத்தில் வேலை,

அள்ளி அள்ளி போட குறையும்

 குழிகள்,

நிரம்பிய குழியை அடைய 

எண்ணி நகரும் விரல்கள்,

தொட்டதெல்லாம் வளர

 உள்ளுக்குள் கொண்டாட்டம்!

ஏற்றத்தாழ்வை இளமையில்

 சொல்லிக் கொடுக்கும் ஆட்டம்!

ஒரு நிமிடத்தில் காலி!


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...