Tuesday, February 18, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya

 



தீர்க்கமாய் ஓடவும் விடாது

துணிந்து நிற்கவும் விடாது

பொறுமையாய் நடக்கவும் விடாது

எவற்றையும் கடத்தவும் விடாது

அழகை ரசிக்கவும் விடாது

எண்ணத்தை தொலைக்கவும் விடாது

சுகத்தை நினைக்கவும் விடாது 

எளிதாய் மறக்கவும் விடாது

கயிறு என்றெண்ணி தாண்டிடவும் விடாது

தவறு என்று தடுக்கவும் விடாது

மனதால் ஏற்கவும் விடாது

பொறுமையை இழக்கவும் விடாது

சுமையை இறக்கவும் விடாது

மாற்றத்தை தோற்கவும் விடாது

ஓய்வாய் சிந்திக்கவும் விடாது

நிறைவாய் இருக்கவும் விடாது

ஓடும் காலத்தோடு ஓடிட வேண்டும் நாமும்

சித்திரமும் கைப்பழக்கம் 

சிதறாமல் வாழ்வது நல்வழக்கம்

- வீணா

ஏற ஏற குறையும்

குறைய குறைய 

ஏறும் காலத்தின் சுழற்சியில்

சிக்காதவர் இல்லை!

எதையும் தள்ளிப் போடதே

என்னை விட்டு போகதே

மீண்டும் வரமாட்டேனே!

நேற்று இன்று நாளை

அதே நொடி மீண்டும் வருவேன்,

 போனேன் ,இருப்பேன்..

ஆனாலும் புதியவன்!

தவறவிட்டதை பிடிக்க முடியாது

இருப்பதை தக்க மறக்காதே

வருவதை பிடிக்க பழகு!

-வித்யா


அண்டத்தின் நான்காம் பரிமாணம் காலம்


அறிவியல் தெரியும் என்பதற்காக


காலப்பயணம் செய்து 


உன் வாழ்வை பல்லண்டத்தில் 


தேடலாம் என்று எண்ணாதே


கருந்துளைக்குள் சிக்கிக் கொண்டால் 


காணாமல் போய்விடுவாய்


கடவுளை தேடிக்கொண்டிருக்கும்


குவாண்டம் கொள்கையே இன்னும்


சரிவர பிடிபடவில்லை


இந்நொடி பொழுதில் இங்கேயே வாழ்ந்து விடு


"எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ

நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

என்ற பாடலுக்கு ஏற்றது போல"


காலத்தை கையாளும் கலையை கற்றுக்கொள்


-பிரியா




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...