Wednesday, February 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

புகையே பகை

ஆனால் இந்த புகை பகையல்ல

மஞ்சளே மருந்து

ஆனா இன்று வெறும் நேற்றியே

எண்ணெய் குளியல் ஆரோக்கியம்

ஆனால் இன்று அதிலும் கலப்படம்

இவை யாவும் இப்படியிருக்க

தேடுகிறேன் இது போன்ற மூதாட்டியை

அறிந்திலேன் அவள் போன இடத்தை

அரைகுறையாய் கற்ற மசாஜ் செய்யும் கூடத்தில்

Veena Shankar:

 தாலாட்ட தாய்

சீராட்ட பாட்டி

விளையாட தாதி

பாராட்ட தந்தை 

தோள் கொடுக்க சகோதரன்

இருந்தார்களாம் அன்று

அழகான கூட்டு குடும்பத்தில்

இன்று

வீட்டு சமையலில் கூட கூட்டு அது தொலைந்து போனது

Veena Shankar:

 வெள்ளை மனது

பிள்ளை மனது

கிள்ளை மொழி 

பிள்ளை பேச்சு

கொள்ளை அழகு

பிள்ளை சிரிப்பு

கள்ளை மிஞ்சும்

பிள்ளை மயக்கம்

தொல்லை தருமோ?

இல்லை 

சுகம் அளிக்குமோ?

தினம் ஒரு பாடம் நமக்கே 

பிள்ளையும் பயிற்றுமே!

Vidhya:

ராஜா வீட்டு கன்றுக்குட்டி 

பிச்சி பூ கொண்டு பந்தாட்ட

 தேனும் பாலும் இருக்க ஜவ்வாது

 சந்தனத்தோடு,அப்பா

 படையெடுத்து கொண்டு வந்த

முத்து,வைரம் ஜோலிக்க கூடவே

 அரபு நாட்டு அக்தர் கமகமக்காக

இவன் எந்த கோட்டையை பிடிக்க

 பிறந்தானோ என்று எள்ளி

 நகையாட,அரங்கேறும் குளியல்

 அந்தபுரத்தில், எங்கும்

 பரவிக்கிடக்கும் ஆனந்தமயம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...