Tuesday, April 30, 2024

கண்மணியே பேசு by Vidhya Nivash

 


அழகான வடிவமைப்பு ,முகம் பார்த்து பேச நேரமில்லாத இன்றைய சூழ்நிலைக்கேற்ப யாரோ அனுபவித்து செய்ததோ. தலை குனிந்து கைப்பேசியோடு பலமணி நேரம் பேசும் நாம். கண்களை பார்த்து பேச கணநேரம் ஒதுக்கினால் என்ன? உயிரற்ற கைப்பேசியே பல உணர்ச்சியை உமிழும் போது, உயிரோட்டமான கண்களை பாருங்க அது பேசாமல் பேசும் அழகை ,சுற்றியுள்ள இயற்கையோடு ரசிக்க செய்த வேலை.

படமும் கருத்தும் by Veena Shankar

  


அமைதிக்காக அமரும் 

இடம் இங்கே எதிரியாக


 தாங்கும் கம்பிகளும்

தடுக்கும் கம்பிகளும்

பலம் கொண்டவை

அமைதியாய் துயிலும் வரை மட்டுமே


 கம்பிகள் தாங்கிய இருக்கையானாலும்

அதையும் தாங்குவது பூமியே மறைமுகமாக.

அது போலத்தான் அப்பாவின் பாசமும் 

பிள்ளைகளிடத்தில்

 அமைதியாக துயில் கொள்ள ஓர் இடம் 

சரிந்து விழுவோம் என்ற பயமில்லாமல்

Monday, April 29, 2024

வட்டப்பாதை by Vidhya Nivash

 


தெளிந்த நீரோ,தேநீரோ..

புளிப்பும் ,இனிப்பும் கலக்க காத்திருக்கு..

எதை பொறுத்தாலும் பொறுக்க முடியா கோபம்,இயலாமையின் வெளிப்பாடு.

காதல் கொண்டேன் எதை கொண்டு ஈர்த்தாய்.காதலில் வரும் பொய் அன்பை ஏற்கும் மனம். கோபத்தில் மெய்யாக உதிர்க்கும் வார்த்தைகளை ஏன்? மனம் ஏற்க மறுக்கிறது.

நினைத்தது,எதிர்ப்பார்த்தது கிடைக்காமல் போகும் போது வரும் ஏமாற்றம் .நினைக்காதது கிடைக்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா..

நாள்பட்ட இனிப்பு கொஞ்சம் புளித்து போக வரும் ஊடலும் சில நேரம் தேவை தானே.பேதையின் போதை தெளிய வைத்து ,தன்னிலை அறிவதும் நலமே!

 வட்டப்பாதை பயணம் ஓர் தொடர்கதை!


படமும் கருத்தும் by Veena Shankar



 இருவரிடமும் கையில் உள்ள பொருள்கள் மாறி இருந்தால்


தன் வாழ்க்கையை காப்பாற்றி கொண்டதாக மகிழ்ச்சி முதலில்


தன்னை வெட்ட வந்த மனிதனுக்கு பழத்தை கொடுத்த மகிழ்ச்சி மரத்திற்கு இரண்டாவதாக

 மனிதனுக்காக தன் இயல்பை மறந்த மரம்

 வெடித்த வேர்க் கால்களை சமன்படுத்த வந்த மனிதனுக்கு பழத்தை புசிக்க கொடுத்தது மரம் நன்றியுணர்ச்சியோடு

Friday, April 26, 2024

சொல்வதெல்லாம் உண்மை by Vidhya Nivash


 சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேரொன்றும் இல்லை,என்பதை போல் நிற்கும் சூரியன்.நான் என் வேலையை தான் செய்கிறேன். காலையில் வர்றேன் மாலை போறேன்.பருவத்திற்கு ஏற்ப நீளும் என் வேலை நேரம்.இதில் வெயிலின் தாக்கம் அதிகமாக நானா காரணம்! பூமி வெப்பமயமாக யார் காரணம்! வருடத்திற்கு வருடம் அதிகமாக காரணம் என்ன யோசியிங்க! என்னை கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்காதீங்க!

படமும் கருத்தும் by Veena Shankar

  


பேசா இறைவனை விட பேசும் மனிதனின் மௌனம் இங்கே அழகு

 பேசாதவனின் விருப்பம் அதுவென்றால் எதுவும் சாத்தியமே

 படைத்தவனின் எண்ணம் போல் 

தான் நம் வாழ்க்கை

அவன் சுருதியின் ஏற்ற இறக்கமே 

நம் உயர்வு தாழ்வு

நீளும் நீலம் by Vidhya Nivash


 எத்தனை முறை பார்த்தாலும் முதன்முறை பார்த்தது போல் சிறுப்பிள்ளையாகி மயங்கி நின்றேன்.எது வானம்,எது கடல் என்று தெரியாமல் குழம்பி நிற்க.இடையே சிறு மணற்பரப்பு கோடுப் போட்டு காட்டியது நான் இருக்கேன்ல என.நீல நிறத்திலே எத்தனை விதம்.வானம் கடலிடம் இருந்து நிறம் வாங்கியதா இல்லை அதன் பிரதிபலிப்பை காட்டும் கடல் கண்ணாடியா! இவர்களுக்கு யார் வந்து வண்ணம் தீட்டி சென்றது.உச்சி வெயிலில் உள்ளம் குளிர கண்ட அற்புத நீலப்புரட்சி..

"ரை றை" சொற்களின் வெளிப்பாடு by Veena Shankar

 


" ரை, றை" சொற்களின் வெளிப்பாடு


அரை இல்லா கணிதமும்

அறை இல்லா பிறப்பும்


இறை இல்லா கோயிலும் 

இரை இல்லா உடலும்


உரை இல்லா நட்புமும்

உறை இல்லா புத்தகமும்


கரை இல்லா நதியும்

கறை இல்லா ஒழுக்கமும்


குறை இல்லா மனமும்

குரை இல்லா வெற்றியும்


கூரை இல்லா இல்லமும்

கூறை இல்லா திருமணமும்


துரை இல்லா ஆளுமையும்

துறை இல்லா வாணிபமும் 


மறை இல்லா மொழியும்

மரை இல்லா காடும்


உண்டோ?

Thursday, April 25, 2024

Hoota cave by Vidhya Nivash



அழகிய சூரிய உதயத்துடன் தொடங்கிய நாள்.காட்டு டால்பின்களை பார்க்க கடலை நோக்கி சென்றோம்.எத்தனை அழகு உல்லாசமாக துள்ளி விளையாடிய டால்பின்கள்.படகில் சுற்றி சுற்றி சென்று ரசித்தோம்.குறைந்தபட்சமாக ஐம்பது பார்த்திருப்போம்.



கடலும் வானும் ஒட்டிக்கொள்ள கதிரவன் வந்து கலந்திருக்க அழகான காட்சி.



நீலக்கடலில் யானை குகை அற்புதம்.அதனுடன் படகு சவாரிக்கு விடைச்சொல்லி. 


பயணம் தொடர்ந்தது Hoota cave வை நோக்கி.எங்கும் மலை இடையிடையே ஊர்.கடைசியாக குகையை அடைந்தோம்.பல மில்லியன் வருடங்கள் பழமையானது.பல ஆண்டுகளுக்கு முன் தான் இப்படி ஒரு குகை இருப்பதே  தெரிந்துள்ளது .பல ஆராய்ச்சியின் பின் 2006 ல் பொது மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 







கண்கொள்ளா காட்சி அந்தரத்தில் தாங்கும்,தொங்கும் பாறைகள்.மேலும் கீழும் வளர்ந்து செல்ல எத்தனை ஆண்டும் தேவைப்பட்டதோ. 

பல வித்தியாசமான வடிவங்கள், இதற்கு நடுவில் ஒரு ஏரி.முன்னும் பின்னும் தெரியாமல் விளையாடும் பிள்ளைப்போல் விளையாடும் கண்தெரியா மீன்கள்.மயான அமைதியில் சொட்டு சொட்டாக வடியும் நீர்.





பழமையை தோண்ட தோண்ட பார்க்க கிடைத்த சொர்க்கம்.வெளியே வந்தால் சூரிய மறைவும், அழகான வெள்ளி நிலாவின் வரவேற்பும் கொள்ளை அழகு.

பிறகு தான் தெரிந்தது நாங்கள் எதிர்பார்க்காத திக் திக் மர்மமான தருணத்தை தர இரவு காத்திருக்கு என்று.எங்கும் இருள்,முன் பின்னும் நாங்கள் மட்டுமே .மலையை சுற்றி சுற்றி வளைந்து நெளிந்து,ஏறி இறங்கும் சாலைகள்.புரியாத புதிராக நீண்ட சாலைகள்,எங்களின் பயணமோ கூக்குள் அக்காவின் கையில்,இதற்கிடையில் எந்த நெட்வொர்க்யும் இல்லை.




வெறும் பேய் கதையாக சொல்லி சிரித்து போக.தீடிரென சாலையில் தண்ணீர் கொஞ்சம் திடுக்கிட. சாலையில் ஓடும் காற்றாறு,சில இடங்களில் சாலையை தொட்டு செல்வது தெரிந்தது.அங்கே அங்கே வந்து போன வீடுகள்.இருட்டில் ஒதுங்கி நின்ற கார்கள். இருளில் வந்தது,போன காரை காணவில்லை.இப்படியாக போன ஒரு மணி நேரம்.ஒருவழியாக அப்பாடா என பொதுசாலையை பிடித்தோம்.



சில மணிநேரத்தில் துபாயை அடைந்தோம்.நடுநிசியிலும் மின்னும் துபாய்,அங்கும் இங்கும் தேனீ கூட்டம் போல் அலையும் மக்கள்.

இரவில் ஓமன் மலை பயணம் மர்ம தேசமே.ஆனால் அழகான சாலைகள்.பிறகு தான் அறிந்தோம் அது காற்றாறு நிறைந்த பகுதி.பலர் அங்கு சென்று ஒய்வெடுப்பார்கள் என.

சில தினத்தில் கனமழையால் நாங்கள் சென்ற இடங்கள் வெள்ளக்காடாக காட்சி தந்தது.


Tuesday, April 23, 2024

புத்தாண்டின் காலடியில்  by Veena Shankar

 


புத்தாண்டின் காலடியில் 


வேண்டியது கிடைக்குமா?

வேண்டாதது கழியுமா?

நினைத்தது பலிக்குமா?

நினைக்காதது நடக்குமா?

சண்டைகள் ஒழியுமா?

சாந்தம் நிலவுமா?

வறுமை கடக்குமா?

பசி உயிர்க்குமா?

வருத்தம் மறையுமா?

மகிழ்ச்சி தோன்றுமா?

ஆரோக்கியம் பெருகுமா?

மேன்மை பெறுமா?

பொறுமை அழியுமா?

மனிதம் வாழுமா?

விடை காண ஆவல் ஆண்டின் இறுதிக்குள்

Wadi by Vidhya Nivash

 தீடிரென ஓமன் நாட்டிற்கு பயணம்.துபாயிலிருந்து சாலை வழி பயணம்.போகும் வழியில் போக விரும்பியது ஒரு அருவி.(Hoqain waterfalls )அந்த இடத்தை அடைந்தோம்.மீன் கடியுடன் சேர்ந்து,தண்ணீரில் நல்ல ஆட்டம்  போட்டோம்.அமீரகத்திலிருந்து சென்ற எங்களுக்கு புதுவிதமான அனுபவம்.



எந்த பக்கம் திரும்பினாலும் wadi .அப்படியென்றால் வறண்ட காற்றாறு,மழை பெய்யும் காலத்தில் மட்டும் நீர் நிறைந்திருக்கும்.பிறகு maabela என்ற தம்பி இருக்கும் இடத்தை அடைந்தோம்.




மாலை நகரத்தை நோக்கிய பயணம்.ரொம்ப வித்தியாசமாக இருந்தது .சுற்றிலும் மலை நடுவே வீடுகள்.துறைமுகத்திற்கு சென்றிருந்தோம். அழகான சூரியன் மறைவு,ஒரு கப்பல் கிளம்பிய நேரம் .அழகான தருணம் அவ்வளவு பெரிய உடலை மெல்ல வளைத்து சென்றது.





பிறகு பல்பொருள் சந்தைக்கு சென்று சுற்றி கடைசியாக மஸ்கட்டின்  முழு அழகை மலையிலிருந்து ரசித்தோம்.மின் விளக்கொளியில் மிளிர்ந்தது. 

மீண்டும் இணைவோம் பயணத்தில்...

உலக புத்தக தினம் by Veena Shankar

 


புரட்டி பார்ப்பதை விட

புரிந்து பகிர்வதும்

பகிர்ந்து மகிழ்வதும்

மகிழ்ந்து பாராட்டுவதும்

பாராட்டி சிறப்பிப்பதும்

சிறப்பித்து புதைவதும்

புதைந்து உணர்வதும்

உணர்ந்த உண்மையின் படி நடப்பதும்

நடப்பது யாவும் நிலையில்லை என்று அறிவிற்கு கொண்டு செல்வதும்

செல்லும் மனதை கவர்வதும் 

கவர்ந்த வாசகரை தன் வசப்படுத்துவதும்

வசப்பட்டதை அடிமையாக்குவதும்

அடிமையானதை நேர் வழியில் பயணிக்க வைப்பதும் ஒருவனே!

அவனும் புத்தகம் என்பவனே!

Monday, April 22, 2024

Sagol Azerbaijan by Vidhya Nivash





அழகான விடியல் நகர்ப்புறத்தில் சூரியன் கட்டடங்களின் கண்ணாடியில் பட்டு எதிரொளித்தார்.வானுயர்ந்த பைன் மரங்கள், எங்கும் சிதறி கிடந்தன பைன்கள். 



ஆம்,நம்மவரே . அந்த ஊர் ரொட்டியை சாப்பிட்டு கொஞ்சம் வெளிறிய நிறத்துடனும், பருத்தும். குளிரில் கொஞ்சம் தொண்டை கட்டினார் போல் கரைந்தார்.




தங்கும் விடுதியிலிருந்து பார்க்கும் தொலைவில் Hyderali centre.புத்தியல் ஓவியத்தின் கட்டடம் ,புதுமையின் பிறப்பிடம்.இந்த கட்டட கலை பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.பக்கூவின் அடையாள கட்டடம்.


பக்கூவை விட்டு விடைபெறும் நேரம் .நாங்கள் பனியையும்,ஒய்வையும் தேடி சென்றதால்,நெருப்பை பார்க்க நேரம் பத்தவில்லை. இந்த நாட்டின் பெயரே fire of land.நெருப்பு கோவில்,நெருப்பு மலை,மண் எரிமலைகள், மினியேச்சர் புத்தக நூலகம் என பார்க்க வேண்டியன பல இருக்கு.

எங்களுடைய அனுபவம் அந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மக்களும் ரொம்ப cool.யாருக்கும் எந்த அவசரமுமில்லை. பொதுவாக அனைத்து இடங்களும் 11am முதல் 5pm மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரத்தில் வாகன நெரிசல் அதிகம்.

கடைசியாக சொர்கமே என்றாலும் சொந்த ஊரை இல்லை வாடகை ஊரை போல வளருமா என பாடி.இட்லி, தோசை,சாம்பார், பிரியாணி சாப்பிட போகும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விமானம் ஏறினோம். 

மீண்டும் ஓர் பயணத்தில் இணைவோம்.
இதுவரை அசர்பைஜானுக்கு என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.

Sagol Azerbaijan 🇦🇿 

படமும் கருத்தும் by Veena Shankar




சூட்டை தணிக்க வேண்டியும்

தனக்கு சளி பிடிக்காது என்ற

தைரியத்திலும்

மழையில் நினைந்த ஊர்திகளின் அணிவகுப்பும்

நம்மை பொறாமை கொள்ளச் செய்கிறதே

முதல் கோடை மழை என்பதால் சிறு அச்சம் எனக்கு

என் சிறு வயதில் நினைந்தாலும்

என் பிள்ளைகளை அனுமதிக்க மறந்தேனே!

ஆனால் அன்று முதல் இன்று வரை 

ஊர்திகளை இந்த மழை பாதிக்கவில்லையோ?

Saturday, April 20, 2024

குரங்கும் பறவையும் by Veena Shankar

 


குரங்கும் பறவையும்


எடுக்கும் முயற்சி அது வீண் அல்ல.


ஒரு அடர்ந்த காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தாலும் அவை யாவும் தத்தம் கூட்டத்தோடு வசிந்து வந்தன. தங்களுடைய பசிக்காக மட்டுமன்றி வேறு எதற்கும் அக்காட்டு விலங்குகள் அடுத்த விலங்குகளை துன்புறுத்துவது கிடையாது. இவைகளுக்கிடையே அங்கே குரங்கு கூட்டங்களும் வசித்து வந்தன. . அங்கே கிடைக்கும் பழங்களை புசித்து காலத்தை ஓட்டி வந்தன அவைகள்.


காடு என்றால் பறவைகளும் இருக்கும் தானே? நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஊர் விட்டு ஊர் வந்த பறவைகளும் அங்கே தஞ்சம் அடைந்திருந்தன. அவைகள் குரங்குகளிடம் 

சினேகாமாய் இருக்க, பறவைகள் உண்ட மிச்ச பழத்தை குரங்குகளும் சுவைத்து மகிழ்ந்தன.


இப்படியிருக்க ஓர் நாள் காட்டை சுற்றிப் பார்க்க வந்த ஓர் பயணியார் கூட்டத்தினரடமிருந்து சில பல பொருட்களை குரங்கு கூட்டங்கள் சூறையாட, அதை அவைகளிடமிருந்து திரும்பி வாங்க தெரியாமல் உள்ளூர் வாசிகளை நாடி பயணியர் சென்றனர்.


 அதற்குள் குரங்கு ஒன்று தனக்கு கிடைத்த ஒரு பொருளை திருப்பி திருப்பி பார்க்க, அது புகைப்படம் எடுக்கும் கருவி என்று தெரியாமல் அது தன்னை அறியாமல் ஏதோ ஒரு பொத்தானை அழுத்த, அது கருவியில் பதிவாகி அதிலிருந்து ஒரு புகைப்படம் காகிதத்தில் வெளி வர, அதை முன்னும் பின்னும் திருப்பி பார்த்த அந்த குரங்கு, அது தன்னுடைய முகம் தான் என்பதை தெரிந்து கொண்டு, அந்த நகலை தன் கூட்டத்தோடு காண்பித்து மகிழ்ந்தது . அதேபோல தனக்கும் எடுத்து தரும்படி கேட்க, அதை இயக்க தெரியாது விழித்தது அந்த குரங்கு. 


 தன்னுடைய மகிழ்ச்சியை பகிர வேண்டி தன் கூட்டத்திற்கு நிதமும் இனிப்பான பழங்களை பறித்து போடும் பறவை கூட்டத்திடமும் காண்பித்தது அந்த குரங்கு . வெகு நாட்களாக பழகியும் ஒரே ஒரு பறவை மட்டும் குரங்கு கூட்டத்தினரோடு இணக்கமாக பழகவில்லை. ஏன் தன் கூட்டத்தினரோடு கூட அந்த பறவை ஒட்டவில்லை என்பதே உண்மை. . எவ்வளவு முயற்சி செய்தும் பலனிக்காத நிலையில் கடைசியில் அதை தங்களோடு இணைத்து கொள்ளும் முயற்சியை கை விட்டன குரங்கு மற்றும் பறவை கூட்டங்கள். 


அந்த பறவை சரியாக பழங்களை சுவைப்பதுமில்லை, தேகம் மெலிந்தும் இருக்கும். ஆனால் இன்றோ குரங்கு ஏதோ ஒன்றை காண்பிக்க மற்ற, தன் இனத்தினர் மகிழ்ச்சியாய் இருப்பதை மரத்தில் உட்கார்ந்து கொண்டு பார்த்த அப்பறவை, குரங்கு கையில் என்ன இருக்கிறது என்பதை காண ஆவல் வர, குரங்கின் பக்கம் பறந்து வந்தது. இப்போது அந்த குரங்கு, அதற்கு வேடிக்கை காட்ட நினைத்து இன்னொரு மரக்கிளையில் தாவி பற்ற, வேறு வழியில்லாமல் அந்த பறவையும் குரங்கிடம் சென்றது.


இனியும் அதை வெறுப்பேற்ற நினைக்காத குரங்கு, அதனிடம் ஒரு நிபந்தனை வைத்தது. அந்த பறவை எதையும் சரியாக உண்ணாததால் இனி கூட்டத்தோடு இணைந்து உண்டு வாழ்ந்தால் மட்டுமே தன் கையிலுள்ள பொருளை காண்பிப்பதாக சொல்ல, அதற்கு இசைந்த பறவையிடம் அந்த கருவியையும் தன் புகைப்படத்தையும் காண்பித்தது குரங்கு. 



ஒரு நிமிடம் அசந்து போன பறவை தன்னிடம் கருவியை தருமாறு கேட்க, குரங்கு ஒப்புக் கொண்டாலும் ஒரு பழத்தை அப்பறவையிடம் நீட்டி சாப்பிட சொன்னது. வேறு வழியில்லாமல் குரங்கு கொடுத்த பழத்தை வாங்கி சுவைப்பதற்குள் சேட்டைக்கார குரங்கு அந்த பழத்தை பறவையின் அலகிற்குள் திணித்துவிட்டது. குரங்கு ஒரு கையில் புகைப்பட கருவி வைத்துகொண்டு இருந்த வேளையில் மறுபடியும் பொத்தான் தானாகவே அழுந்த, பறவை , பழம் உண்ணும் காட்சி பதிவாகியது. ஆனால் அழகான சிறிய அலகை கொண்ட பறவைக்கு பாதி பழம் உள்ளே சென்ற நிலையில் அதன் அழகு பெரிய அளவில் புகைப்படத்தில் பதிவாக குரங்கு, பறவையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது. அது புகைப்படம் என்பது அவைகளுக்கு தெரியாத போதும் பறவையை ஒரு பழத்தை ஏமாற்றி சுவைக்க வைத்த குரங்கின் முயற்சி வெற்றியே!

தலைநகர் பக்கூவை நோக்கிய பயணம் by Vidhya Nivash

 






இரட்டையர் வானை அலங்கரிக்க, சுற்றியுள்ள புதுமையை ரசிக்க விடிந்த நாள் .

இன்னும் ஒரு நாள் என்ற சிறு ஏக்கத்தில் பிரிய மனமில்லாமல் அவ்விடத்திலிருந்து(Qabala to Baku)விடைப்பெற்றோம்.


தலைநகரை நோக்கிய பயணம் .வித்தியாசமான மரங்கள் வழிவிட கட்டட குவியலுக்கு முன் காஸ்பியன் கடல் வரவேற்றது(flame tower,Deniz mall,Baku eye) .







சைக்கிளில் பால் வந்து எடுப்பது போல் அங்கே அங்கே கச்சா எண்ணெய் எடுக்கும் இயந்திரம் வாயைப்பிளக்க  பார்த்தோம். அங்கே அந்த அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் அதிகம். 


கடைசியாக தலைநகரின் நிஜாமி தெருவை அடைந்து பசியாற்றி.அருகாட்சியகம்(Nizami museum of Literature in old city) சென்று தெரிந்து கொண்டது . அவர்கள் படையெடுத்து சென்றதைவிட கவிப்பாடி சென்றதே அதிகம். கவிஞர்களும்,தத்துவ மேதைகளும் அந்த நாட்டின் பெருமையை பரப்பி பல  கலாச்சாரத்தையும்,மாற்றத்தையும் கொண்டு வந்து  கடைசியில் இன்று முழுவதுமாக பலவற்றில் ஐரோப்பியரை பின்பற்றுகின்றனர்.பழமை ,புதுமை கலந்த நாடு.





பெண் கவிஞர் ,வித்தியாசமான கட்டடம்(Nizami street) மற்றும் கோட்டை(Maiden tower,old city, Baku). 

அவர்கள் இந்தியாவிற்கு வந்ததற்கு அடையாளமாக கவிப்பாடி இந்திய அழகியை மணந்து சென்றுள்ளனர்.நம்மவரோ அங்கு நெருப்பை கடவுளாக வணங்கும் கோயிலை விட்டு வந்துள்ளனர்.(fire temple)


அங்கிருந்த மூதாட்டி எங்களுடன் ஆசையாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருக்கு பழைய இந்தியன் சினிமா பிடிக்குமாம்.ஆனால் நாங்கள் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை.😃




கடைசியாக அழகான தருணம்,நிழற்படங்களில் பார்த்த துலிப் மலர்கள் முதன்முறையாக கண்ணருகில்,மனதை மயக்கும்  நிறமும்,மணமும் மதிமயக்கியது.(Baku Boulevard or national park)

கடைசியாக தங்கும் விடுதி,சாலையில் நடைபயணம்,அழகாக எங்களை அவர்கள் நாட்டுக்கு வரவேற்ற போக்குவரத்து காவலர்.

மெக்டொனால்ட்ஸ் என்று உணவு வாங்க சென்று பெரிய  போரட்டத்திற்கு பிறகு அந்த ஊர் சின்ன பையன் உதவி உள்ளான்.தாய்மொழியை எல்லோரும் பிரதான உணவாக ஆங்கிலத்தை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.நம் நாட்டில் மட்டுமே அது விதிவிலக்கு என்ற வருத்தம்.

கடைசி இரவு,பெட்டி, மூட்டைக்கட்டி விடியலை நோக்கிய இரவு.


இவர் யார்?

மீண்டும் இணைவோம் கடைசி நாள் பயணத்தில்...


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...