Wednesday, April 17, 2024

தயக்கம் ஏன்? மௌனம் ஏன்? by Veena Shankar



  தயக்கம்


ஆரம்பம் எது என்று தெரியாதவரை தயக்கம்


அறிந்த பின் தொடர்வதில் தயக்கம்


தொடர்ந்த பின் அதன் முடிவு அறிய தயக்கம்


முடிவு அறிந்தாலும் அதை தக்க வைக்க தயக்கம்


போராட சொல்லும் உலகில்


ஏன் இந்த மௌனம்?


யாரும் வேண்டிய போது தானாய் அமையாதது


சம்மதம் என்று தவறாக நினைத்து விடை கொள்வது


வருத்தத்தால் தானாக வருவது அதனால் விலகி நிற்பது  


பேச்சை இன்னும் வலுக்காமல் வார்த்தையை காப்பது


கோபத்தின் உச்ச கட்டம் இது என்று எண்ண தோன்றாதது 


நீண்ட விளக்கம் கொடுக்க நினைத்து சிந்தித்து இருப்பது


தவிர்க்க முடியாத கேள்விக்கு தவிர்க்க வேண்டிய சந்தர்ப்பத்தில் நிகழ்வது


உடல் அசதியில் தானாக உருவாவது


பிறர் செயலில் திருப்தி கொள்ளாமல் பிறப்பது


அடுத்தவரின் பிடியில் சிக்கியிருக்கும் போது சமாளிப்பது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...