இரட்டையர் வானை அலங்கரிக்க, சுற்றியுள்ள புதுமையை ரசிக்க விடிந்த நாள் .
இன்னும் ஒரு நாள் என்ற சிறு ஏக்கத்தில் பிரிய மனமில்லாமல் அவ்விடத்திலிருந்து(Qabala to Baku)விடைப்பெற்றோம்.
தலைநகரை நோக்கிய பயணம் .வித்தியாசமான மரங்கள் வழிவிட கட்டட குவியலுக்கு முன் காஸ்பியன் கடல் வரவேற்றது(flame tower,Deniz mall,Baku eye) .
சைக்கிளில் பால் வந்து எடுப்பது போல் அங்கே அங்கே கச்சா எண்ணெய் எடுக்கும் இயந்திரம் வாயைப்பிளக்க பார்த்தோம். அங்கே அந்த அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் அதிகம்.
கடைசியாக தலைநகரின் நிஜாமி தெருவை அடைந்து பசியாற்றி.அருகாட்சியகம்(Nizami museum of Literature in old city) சென்று தெரிந்து கொண்டது . அவர்கள் படையெடுத்து சென்றதைவிட கவிப்பாடி சென்றதே அதிகம். கவிஞர்களும்,தத்துவ மேதைகளும் அந்த நாட்டின் பெருமையை பரப்பி பல கலாச்சாரத்தையும்,மாற்றத்தையும் கொண்டு வந்து கடைசியில் இன்று முழுவதுமாக பலவற்றில் ஐரோப்பியரை பின்பற்றுகின்றனர்.பழமை ,புதுமை கலந்த நாடு.
பெண் கவிஞர் ,வித்தியாசமான கட்டடம்(Nizami street) மற்றும் கோட்டை(Maiden tower,old city, Baku).
அவர்கள் இந்தியாவிற்கு வந்ததற்கு அடையாளமாக கவிப்பாடி இந்திய அழகியை மணந்து சென்றுள்ளனர்.நம்மவரோ அங்கு நெருப்பை கடவுளாக வணங்கும் கோயிலை விட்டு வந்துள்ளனர்.(fire temple)
அங்கிருந்த மூதாட்டி எங்களுடன் ஆசையாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருக்கு பழைய இந்தியன் சினிமா பிடிக்குமாம்.ஆனால் நாங்கள் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை.😃
கடைசியாக அழகான தருணம்,நிழற்படங்களில் பார்த்த துலிப் மலர்கள் முதன்முறையாக கண்ணருகில்,மனதை மயக்கும் நிறமும்,மணமும் மதிமயக்கியது.(Baku Boulevard or national park)
கடைசியாக தங்கும் விடுதி,சாலையில் நடைபயணம்,அழகாக எங்களை அவர்கள் நாட்டுக்கு வரவேற்ற போக்குவரத்து காவலர்.
மெக்டொனால்ட்ஸ் என்று உணவு வாங்க சென்று பெரிய போரட்டத்திற்கு பிறகு அந்த ஊர் சின்ன பையன் உதவி உள்ளான்.தாய்மொழியை எல்லோரும் பிரதான உணவாக ஆங்கிலத்தை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.நம் நாட்டில் மட்டுமே அது விதிவிலக்கு என்ற வருத்தம்.
கடைசி இரவு,பெட்டி, மூட்டைக்கட்டி விடியலை நோக்கிய இரவு.
இவர் யார்?
மீண்டும் இணைவோம் கடைசி நாள் பயணத்தில்...



















No comments:
Post a Comment