Monday, April 15, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


அடுத்த வீட்டின் சாம்பார் வாசம் மெல்ல வருவதும் ஜன்னல் வழியே


ஆக்ரோஷமான சண்டை சச்சரவுகளை கண்டதும் ஜன்னல் வழியே


இதமான பாடல்கள் இசைத்து கேட்பதும் ஜன்னல் வழியே


ஈரமான வாடை காற்றையும் உணர்வது ஜன்னல் வழியே


உதயமாகும் சூரியனை வணங்குவதும் ஜன்னல் வழியே


ஊர்வலமாக போகும் மணமக்களை எட்டிப் பார்ப்பதும் ஜன்னல் வழியே


எல்லாம்வல்ல இறைவனின் கோபுரத்தை கும்பிடுவதும் ஜன்னல் வழியே


ஏதோ நம் நிசப்தங்கள் களையப்படுவதும் ஜன்னல் வழியே


ஐயங்கள் தீர இரு வீட்டினர் உரையாடுவதும் ஜன்னல் வழியே


ஒளிந்து மறைவாய் வாலிப வயதை கடப்பதும் ஜன்னல் வழியே


ஓடாத வயதில் அடுத்தவரின் உதவியை நாடுவதும் ஜன்னல் வழியே


ஒளடதங்கள் கிடைக்கப்பெறுவதும் ஜன்னல் வழியே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...