Monday, April 15, 2024

எங்கே நீ எங்கே by Vidhya Nivash

 


இரவில் உறங்கிய நகரம் பகலில் ஆச்சரிக்க(Baku) காத்திருக்க.எங்கும் வித்தியாசமான கட்டடங்கள் உருண்டு,நீண்டு,சுருண்டு பல வடிவங்களில் காட்சி தர.(carpet museum, Baku)




இந்தியரை மிஞ்சும் வகையில் கட்டடத்திற்கு கட்டடம் அந்தரத்தில் காய்ந்த துணிகள்.



பகலில் நீண்டு விரிந்து ஓடிய காஸ்பியன் கடல் ஊரை வலம்வர. மலைமுகடுகளின் அடிவாரத்தில் கொட்டிக்கிடந்த வீடுகள்.

கோட் சூட் போட்ட மக்கள் அகன்ற விழிகளில் எங்களை பார்க்க,கண்ணில் காண்பவற்றை ஆச்சரியமாக நாங்கள் பார்க்க, பிள்ளைகளோ ஏன் இப்படி பார்க்கிறாங்க என கேட்க. 



புரியாத மொழியில் சைகையே கைக்கொடுக்க வயிரு நிரம்பியது  அவர்களுடைய பிரதான உணவான ரொட்டி, தேநீர் மற்றும் மோருடன்...



எங்கே நீ எங்கே என்று தொடர்ந்த பயணத்திற்கு விடைதேடிய கண்ணிற்கு கிடைத்த காட்சி(Shahdag mountain).இதற்காக தான் இந்த பயணமே.எங்களில் பலருக்கு முதல்முறை.பலரின் கனவு நிறைவேற்ற காத்திருந்த பனிமலை.அள்ளி அள்ளி விளையாட கெஞ்சிய பனி,ஒருவிதமான இனம்புரியாத அனுபவம்.



தங்கும் விடுதியை சுற்றிலும் பனிமலை . சின்ன குருவி ஒன்று கூக்குரலிட மேகங்கள் வந்து தொட்டு தொட்டு செல்ல பனிமலையை ,கொஞ்சம் கொஞ்சமாக இரவின் மடியில் சூழல்.

காரசாரமாக உண்ட நாக்கு இரு தினத்தில் வாட அதன் தாகத்தை கைவசம் இருந்த ஊறுகாயும், மாகியும் நிறைவு செய்தது .



பனிப் பொழியும் இரவு அதிசயத்தை தர காத்திருக்க. சிறு சிறு மழைத் தூறல் மெல்ல பனி மழையாக மாறிய அதிசயம்.யாரோ பனிக்கட்டியை துருவி தூவ .புதிதாக பிறந்தது போல்,அதுவரை கட்டிக்கிடந்த சிறகுகள் விரிய பட்டாம்பூச்சியாக மாறி பறக்க. கூடவே தோழிகள் சேர சுருட்டி வைத்திருந்த வால் நீள ,ஒரே துள்ளல் பனிமழையில், உறங்க மனமில்லாமல் விடியலுக்காக காத்திருந்த கணம்.

மீண்டும் இணைவோம் பயணத்தில்...

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...