பனியிலும் அழகிய ஓடை ஒன்று சிந்து பாட.இயற்கை தாயின் மடியில் விளையாடும் மேகங்கள் போல் நாங்களும் போதும் போதும் என்ற அளவிற்கு,ஆடி,பாடி,உருண்டு,கடைசியாக விடைப்பெறும் நேரம் வர.பிறந்த வீட்டை விட்டு செல்ல மனவரா பிள்ளைப்போல் கனத்த இதயத்துடன் விடைப்பெற்றோம்.
(Shahdag mountain to Quba)
மிக நீண்ட பயணத்திற்கு பிறகு அடைய வேண்டிய இடத்தை அடைந்தோம். யாரும் இல்லா ஏரி(Macara lake,Quba)கேட்பாரற்று உறங்கிக்கிடக்க .எங்களின் சிரிப்பொலி மற்றும் ஆட்டத்தில் எழுப்பி.யார் இவர்கள் என கலங்க செய்தோம்.
கடைசியாக தங்கும் விடுதியை அடைந்து(Quba),ஒரு குளியல் போடலாம் களைப்பு நீங்க என .புதுவிதமான பெயர்"டர்க்கிஷ் பாத்" என்னவென்றே தெரியாமல், கிணற்றடியில் குளிப்பது போல் குளித்து வந்து .சிரித்த சிரிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத விடியலையும்,குளியலையும் தந்து அந்த நாளை நிறைவு செய்தது.
மீண்டும் இணைவோம் பயணத்தில்...











அருமையான படைப்பு. அதிலும் "பகலவன்.உண்மையிலேயே தினமும் அரங்கேறும் பிள்ளைப்பேறு. " அருமை வித்யா
ReplyDelete