தீபத்தின் சுடரும் மாறியது கொண்டவனின் வர்ணத்திற்கு
ஒளியில் இல்லை மாற்றம்
எவர் ஏற்றினாலும் எரியும் தீபம்
தூணாக எண்ணையும்
தூண்டிவிடும் கரங்களும்
துகிலுரிக்கும் திரியும்
இருக்கும் வரை
தீபத்தின் சுடர் சொல்வது என்ன?
திரியின் நீளத்திற்கு ஏற்ப வெளிச்சம் தருவேன் என்றா?

No comments:
Post a Comment