Thursday, April 18, 2024

எங்கே நீளும் இந்தப்பாதை by Vidhya Nivash







 அழகான சூரிய உதயத்துடன் துவங்கிய தினம்.தினம் தினம் ஒரு புதுப் பிறப்பு அதை உணர்ந்தும் உதயம்.

மிக நீண்ட பயணத்திற்கு தயாரானோம்.கியூபா (Quba to Qabala) என்ற இடத்திலிருந்து காபாலா சென்றோம்.வழியெங்கும் மலை,மரம்,ஆறு ,தோட்டம்.எதற்காக என தெரியவில்லை இளஞ்சிவப்பு நிற பூந்தோட்டங்கள்.




 வெறும் குச்சியை தாங்கிய மரங்கள்,பூக்களாக மலரும் நாள் எப்படி இருக்கும்!எதோ மலை என்று சொல்லி வாகன ஓட்டுனர் கடைசியில் உணவிற்கு நிறுத்தினார்.பார்க்க வேண்டிய பலவற்றை மொழி தெரியா சில நேரத்தில் தூங்கி நழுவவிட்டது.

பல அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உள்ளடக்கிய இயற்கை.தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வளைந்து,நெளிந்த,காகிதம் போன்ற இலைகள் வழிநெடுக வரவேற்க ஒரே மகிழ்ச்சி.




முதல் நாள் அனுபவம் உணவகத்திற்கு செல்லாமல் பல்பொருள் அங்காடிக்கு சென்று கிடைத்ததை உண்டோம். கடைசியாக சோறும் மோரும் கிடைத்தது.மீண்டும் தொடர்ந்த பயணம் ஒரு ஏரியில் (Nohur lake,Qabala)முடிந்தது.




அங்கிருந்து தங்கும் வீடு ஆற்றை ஒட்டி,இருட்டில் சலசலவென சத்தம் காதிற்கு இதமாக இருந்தது.இருந்ததை உண்டு, ஆடி,பாடி மகிழ்ந்து உறங்க சென்றோம்.இவ்வுலகில் அக புற தன்நிறைவு அதைவிட பெரிய மகிழ்ச்சி ஒன்று இருக்கா!

மீண்டும் இணைவோம் பயணத்தில்..



1 comment:

  1. நீண்ட பயணம். அருமை தோழியே

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...