Friday, April 19, 2024

கண்டுக்கொண்டேன் உண்டுவிட்டேன் by Vidhya Nivash






குருவிகளின் ரிங்காரம் துயிலிருந்து எழுப்பியது .சுற்றிலும் மலை எங்கோ கேட்கும் காட்டாற்றியின் சத்தம்.சூரிய உதயத்தை தேடி செல்ல.நான் வந்து விட்டேன் என்பதன் அடையாளமாக சூரியனின் நிறமணிந்து வந்த வானூர்தி.வானை கிழித்துக்கொண்டு நெருப்பு போல் படலமிட்டு சென்றது.

பனிமலை(Tufandag mountain) உருகி ஆறாக ஓடியது.அதன் வேகம் சத்தில் உணர முடிந்தது.





கண்டுக்கொண்டேன் உண்டுவிட்டேன்...

மலை அருவியை காண படையெடுத்தோம்.வழியெங்கும் தோட்டத்து பழங்களுடன்,பல வண்ணத்தில் தொங்கிய வட்ட வட்ட தோசை வடிவம்.வாங்கி பார்த்தால் நம்ம இலந்தவடை மாதிரி பழத்தில் செய்தது. மாதுளை அந்த ஊர் தேசிய பழம்.



எலி வால் மாதிரி நீண்டுக்கொண்டே சென்ற அருவியின் தொடக்கம் அசுர உயரம்(seven beauties waterfall,Qabala).மலையின் நடுவே சத்தத்தை எழுப்பி அவளை காண்பவருக்கு மனஅமைதியை தந்தாள்.





மீண்டும் ஒரு மலை சவாரி(Tufandag mountain, Qusar).மலையின் நீர் உருகி ஊரை வலம்வருவதை ரசிக்க முடிந்தது.மலைகளின் நடுவே ஊர் வியப்பை தந்தது.நகர்ப்புறத்தை விட்டு தொலைத்தூர இருப்பு ஆச்சரிக்க செய்தது.மனிதனின் கைவண்ணத்தில் அசத்திய நீர்நிலை அழகு.

கண்டுக்கொண்டோம், உண்டுவிட்டோம்

நண்பர் சொன்னது தான் மறக்க ,மறுக்க முடியா உண்மை.இரண்டு காதிலிருந்தும் மைதாவாக கொட்டுதே என்றார்.பல நாள் தேடல் கடைசியாக கிடைத்த பிரியாணி,அந்த ஆற்றாமையை நிறைவு செய்தது.(Malabar ,Qabala)




வெள்ளைப்பூக்கள் அதன் வாசனைக்கு மொய்க்கும் தேனீயின் மத்தியில் சிறிது இடம் கடன் கேட்டு படம்பிடித்தோம். அத்தனை அழகும்,மணமும் எவர் தந்தார்.


 அருவியின் மத்தியி்ல் அமர்ந்து அருந்திய அவர்களின் பாரம்பரிய தேநீர்.அதிலே எத்தனை விதம் பல வண்ண பூக்கள் நிறைந்த தேயிலை.அதிலும் மாதுளை சுவை அருமை.  




கடைசியாக இருந்ததை உண்டு முடித்து ,மூட்டைக்கட்டி உறங்க சென்றோம்.

மீண்டும் இணைவோம் பயணத்தில்....



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...