Saturday, April 6, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


மலரும் மங்கையும் ஒன்றா என்று கேட்டது

 என் மனம்

இருக்காது என்றது அதுவும்

மலரின் மெல்லிய இதழ் மங்கையிடம் உண்டு

ஆனால்

மங்கையின் உணர்ச்சி மலரிடம்

இல்லை என்றே உணர்ந்தேன்

நான் என்னில் அனுபவித்த போது


 இடம் மாறி வந்தாலும்

யார் தேடி வந்தாலும் 

 சுவை மாறா மலரின் தேன்


இயற்கையில் ஏன் இந்த திடீர் மாற்றம்?


ஒருவர் வேலையை அடுத்தவர் பார்க்க

அதுவும் வீன் தானே!


தேனீக்கள் சேமிக்கும் தேனை தேனடையில் காப்பது 

மனிதன் அதனை

களவாடத்தானோ?

அதனின் உழைப்பை வீணடிக்கத்தானோ?

ஆழியும் அலைகளை பெயர்ந்து பூமியை

கொள்ளையடிப்பது சரிதானா?

இயற்கை என்றுமே இயற்கை, 

இதை படமாய் கொள்ள மட்டுமே முடியும் நம்மால்


 மலரின் வளர்ச்சி கண்டு 

மரம் என்றெண்ணி தன் கூட்டை அமைக்க வலம் வந்ததோ இதுவும்?


அது ஒரு மங்கை என்றெண்ணி

மயங்கியதோ,

காதல் கொள்ள எத்தனித்ததோ இதுவும்?


 மலரின் தேன் சுவை அறிந்து பருக துடித்ததிதோ இதுவும்?


உண்மை அறியும் வேளையிலும் மலரையே சுற்றி வந்ததோ இதுவும்?


மங்கையின் அழகில் மயங்கும் வீரமிக்க காளை போலே


இனம் எதிர் இனத்தோடு சேர இயற்கையும் வழி தாருமோ?


இயற்கையின் மொழியில் செயற்கை செருமோ?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...