Thursday, April 25, 2024

Hoota cave by Vidhya Nivash



அழகிய சூரிய உதயத்துடன் தொடங்கிய நாள்.காட்டு டால்பின்களை பார்க்க கடலை நோக்கி சென்றோம்.எத்தனை அழகு உல்லாசமாக துள்ளி விளையாடிய டால்பின்கள்.படகில் சுற்றி சுற்றி சென்று ரசித்தோம்.குறைந்தபட்சமாக ஐம்பது பார்த்திருப்போம்.



கடலும் வானும் ஒட்டிக்கொள்ள கதிரவன் வந்து கலந்திருக்க அழகான காட்சி.



நீலக்கடலில் யானை குகை அற்புதம்.அதனுடன் படகு சவாரிக்கு விடைச்சொல்லி. 


பயணம் தொடர்ந்தது Hoota cave வை நோக்கி.எங்கும் மலை இடையிடையே ஊர்.கடைசியாக குகையை அடைந்தோம்.பல மில்லியன் வருடங்கள் பழமையானது.பல ஆண்டுகளுக்கு முன் தான் இப்படி ஒரு குகை இருப்பதே  தெரிந்துள்ளது .பல ஆராய்ச்சியின் பின் 2006 ல் பொது மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 







கண்கொள்ளா காட்சி அந்தரத்தில் தாங்கும்,தொங்கும் பாறைகள்.மேலும் கீழும் வளர்ந்து செல்ல எத்தனை ஆண்டும் தேவைப்பட்டதோ. 

பல வித்தியாசமான வடிவங்கள், இதற்கு நடுவில் ஒரு ஏரி.முன்னும் பின்னும் தெரியாமல் விளையாடும் பிள்ளைப்போல் விளையாடும் கண்தெரியா மீன்கள்.மயான அமைதியில் சொட்டு சொட்டாக வடியும் நீர்.





பழமையை தோண்ட தோண்ட பார்க்க கிடைத்த சொர்க்கம்.வெளியே வந்தால் சூரிய மறைவும், அழகான வெள்ளி நிலாவின் வரவேற்பும் கொள்ளை அழகு.

பிறகு தான் தெரிந்தது நாங்கள் எதிர்பார்க்காத திக் திக் மர்மமான தருணத்தை தர இரவு காத்திருக்கு என்று.எங்கும் இருள்,முன் பின்னும் நாங்கள் மட்டுமே .மலையை சுற்றி சுற்றி வளைந்து நெளிந்து,ஏறி இறங்கும் சாலைகள்.புரியாத புதிராக நீண்ட சாலைகள்,எங்களின் பயணமோ கூக்குள் அக்காவின் கையில்,இதற்கிடையில் எந்த நெட்வொர்க்யும் இல்லை.




வெறும் பேய் கதையாக சொல்லி சிரித்து போக.தீடிரென சாலையில் தண்ணீர் கொஞ்சம் திடுக்கிட. சாலையில் ஓடும் காற்றாறு,சில இடங்களில் சாலையை தொட்டு செல்வது தெரிந்தது.அங்கே அங்கே வந்து போன வீடுகள்.இருட்டில் ஒதுங்கி நின்ற கார்கள். இருளில் வந்தது,போன காரை காணவில்லை.இப்படியாக போன ஒரு மணி நேரம்.ஒருவழியாக அப்பாடா என பொதுசாலையை பிடித்தோம்.



சில மணிநேரத்தில் துபாயை அடைந்தோம்.நடுநிசியிலும் மின்னும் துபாய்,அங்கும் இங்கும் தேனீ கூட்டம் போல் அலையும் மக்கள்.

இரவில் ஓமன் மலை பயணம் மர்ம தேசமே.ஆனால் அழகான சாலைகள்.பிறகு தான் அறிந்தோம் அது காற்றாறு நிறைந்த பகுதி.பலர் அங்கு சென்று ஒய்வெடுப்பார்கள் என.

சில தினத்தில் கனமழையால் நாங்கள் சென்ற இடங்கள் வெள்ளக்காடாக காட்சி தந்தது.


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...