Wednesday, April 17, 2024

நீ எங்கே நானும் அங்கே by Vidhya Nivash

 


கண்விழித்த போது இளம்வெயிலில் தகதகவென மின்னிய பனிமலை(Shahdag mountain). ஆஹா என காலை வணக்கம் சொல்லி,கீழே சென்று பனியில் காலை பதித்தால் ஒரு புது அனுபவம். கல் உள்ளே ஆழத்தில் நீர்.அதிலும் உறையாமல் இருந்த குளம்.










யாரோ செய்த வேலையா..கண்ணாம்மூச்சி ஆட😃




நாவிற்கு சுவையான காலை உணவு.அங்கு புலாவும் ஒரு பிரதான உணவு.



மலையின் உச்சியிலிருந்து கீழே இறங்க ஒரு சவாரி.கொஞ்சம் பயம் நிறைய ஆசை மகனின் வேகத்திற்கு உறைந்து போய் இறங்கினேன். மேலே ஏறும் போது சிறுபிள்ளை போல் ரசித்து வந்தேன்.எறும்பின் வேகத்தில் ஏறியது😃.




எல்லையில்லாத ஆனந்தத்தில் பிள்ளைகள்.அவர்கள் மட்டுமல்ல நாங்களும் தான்.

முதல் நாளுக்கு மாறாக எங்கும் மூடுபனி மீண்டும் மறைந்து போன பனிமலை.

உதயத்தை போலவே மறைவும் அழகே.





நீ எங்கே நானும் அங்கே..

என்ன சாப்பிட்டாலும் ரசம் சாதத்திற்கு ஈடாகாது. தக்காளி இல்லாத அதிரடி ரசம் அன்றைய நாளை நிறைவு செய்தது.

மீண்டும் இணைவோம் பயணத்தில்...

1 comment:

  1. அழகிய படக்காட்சிகளுடன் தங்கள் எழுத்தும் குளிர்ச்சி ஊட்டியது. அருமை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...