தீடிரென ஓமன் நாட்டிற்கு பயணம்.துபாயிலிருந்து சாலை வழி பயணம்.போகும் வழியில் போக விரும்பியது ஒரு அருவி.(Hoqain waterfalls )அந்த இடத்தை அடைந்தோம்.மீன் கடியுடன் சேர்ந்து,தண்ணீரில் நல்ல ஆட்டம் போட்டோம்.அமீரகத்திலிருந்து சென்ற எங்களுக்கு புதுவிதமான அனுபவம்.
எந்த பக்கம் திரும்பினாலும் wadi .அப்படியென்றால் வறண்ட காற்றாறு,மழை பெய்யும் காலத்தில் மட்டும் நீர் நிறைந்திருக்கும்.பிறகு maabela என்ற தம்பி இருக்கும் இடத்தை அடைந்தோம்.
மாலை நகரத்தை நோக்கிய பயணம்.ரொம்ப வித்தியாசமாக இருந்தது .சுற்றிலும் மலை நடுவே வீடுகள்.துறைமுகத்திற்கு சென்றிருந்தோம். அழகான சூரியன் மறைவு,ஒரு கப்பல் கிளம்பிய நேரம் .அழகான தருணம் அவ்வளவு பெரிய உடலை மெல்ல வளைத்து சென்றது.
பிறகு பல்பொருள் சந்தைக்கு சென்று சுற்றி கடைசியாக மஸ்கட்டின் முழு அழகை மலையிலிருந்து ரசித்தோம்.மின் விளக்கொளியில் மிளிர்ந்தது.
மீண்டும் இணைவோம் பயணத்தில்...






No comments:
Post a Comment