Sunday, April 14, 2024

தெளிவு by Veena Shankar

 


தெளிய வைத்தவனிடம் ஓர் கேள்வி


தெளிவில்லாத நான் 

தெளிவான உன்னை

அருந்தியதும்

தெளிவு இழந்தது என் வயிறு

தெளிவானது என் அகம் 

தெளிந்த வேளையில் 

நான் தெளிவானதால் 

தெளிவான பேச்சு என்னிடமிருந்து வர

தெளியாத நேரத்தில்

நான் சொன்னது தெளிவில்லாமல் போக 

தெளிவான மனிதர்களும்

நான் தெளிந்த வேளையிலும் என்னை தெளிவாக 

நிராகரிக்க 

மீண்டும் தெளிவில்லாமல் போன நான் தெளிவான உன்னிடம் தஞ்சமானேன் 

இப்போது என் கேள்வி நான் தெளிவாக இருக்கவா?

இல்லை

நான் தெளிவை இழக்கவா?

தெளிந்திருக்கும் நீயும் தெளிவாய் தெரிந்து கொள்ள

இன்னும் தெளிவாய் சொல்லவா?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...