Saturday, April 20, 2024

குரங்கும் பறவையும் by Veena Shankar

 


குரங்கும் பறவையும்


எடுக்கும் முயற்சி அது வீண் அல்ல.


ஒரு அடர்ந்த காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தாலும் அவை யாவும் தத்தம் கூட்டத்தோடு வசிந்து வந்தன. தங்களுடைய பசிக்காக மட்டுமன்றி வேறு எதற்கும் அக்காட்டு விலங்குகள் அடுத்த விலங்குகளை துன்புறுத்துவது கிடையாது. இவைகளுக்கிடையே அங்கே குரங்கு கூட்டங்களும் வசித்து வந்தன. . அங்கே கிடைக்கும் பழங்களை புசித்து காலத்தை ஓட்டி வந்தன அவைகள்.


காடு என்றால் பறவைகளும் இருக்கும் தானே? நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஊர் விட்டு ஊர் வந்த பறவைகளும் அங்கே தஞ்சம் அடைந்திருந்தன. அவைகள் குரங்குகளிடம் 

சினேகாமாய் இருக்க, பறவைகள் உண்ட மிச்ச பழத்தை குரங்குகளும் சுவைத்து மகிழ்ந்தன.


இப்படியிருக்க ஓர் நாள் காட்டை சுற்றிப் பார்க்க வந்த ஓர் பயணியார் கூட்டத்தினரடமிருந்து சில பல பொருட்களை குரங்கு கூட்டங்கள் சூறையாட, அதை அவைகளிடமிருந்து திரும்பி வாங்க தெரியாமல் உள்ளூர் வாசிகளை நாடி பயணியர் சென்றனர்.


 அதற்குள் குரங்கு ஒன்று தனக்கு கிடைத்த ஒரு பொருளை திருப்பி திருப்பி பார்க்க, அது புகைப்படம் எடுக்கும் கருவி என்று தெரியாமல் அது தன்னை அறியாமல் ஏதோ ஒரு பொத்தானை அழுத்த, அது கருவியில் பதிவாகி அதிலிருந்து ஒரு புகைப்படம் காகிதத்தில் வெளி வர, அதை முன்னும் பின்னும் திருப்பி பார்த்த அந்த குரங்கு, அது தன்னுடைய முகம் தான் என்பதை தெரிந்து கொண்டு, அந்த நகலை தன் கூட்டத்தோடு காண்பித்து மகிழ்ந்தது . அதேபோல தனக்கும் எடுத்து தரும்படி கேட்க, அதை இயக்க தெரியாது விழித்தது அந்த குரங்கு. 


 தன்னுடைய மகிழ்ச்சியை பகிர வேண்டி தன் கூட்டத்திற்கு நிதமும் இனிப்பான பழங்களை பறித்து போடும் பறவை கூட்டத்திடமும் காண்பித்தது அந்த குரங்கு . வெகு நாட்களாக பழகியும் ஒரே ஒரு பறவை மட்டும் குரங்கு கூட்டத்தினரோடு இணக்கமாக பழகவில்லை. ஏன் தன் கூட்டத்தினரோடு கூட அந்த பறவை ஒட்டவில்லை என்பதே உண்மை. . எவ்வளவு முயற்சி செய்தும் பலனிக்காத நிலையில் கடைசியில் அதை தங்களோடு இணைத்து கொள்ளும் முயற்சியை கை விட்டன குரங்கு மற்றும் பறவை கூட்டங்கள். 


அந்த பறவை சரியாக பழங்களை சுவைப்பதுமில்லை, தேகம் மெலிந்தும் இருக்கும். ஆனால் இன்றோ குரங்கு ஏதோ ஒன்றை காண்பிக்க மற்ற, தன் இனத்தினர் மகிழ்ச்சியாய் இருப்பதை மரத்தில் உட்கார்ந்து கொண்டு பார்த்த அப்பறவை, குரங்கு கையில் என்ன இருக்கிறது என்பதை காண ஆவல் வர, குரங்கின் பக்கம் பறந்து வந்தது. இப்போது அந்த குரங்கு, அதற்கு வேடிக்கை காட்ட நினைத்து இன்னொரு மரக்கிளையில் தாவி பற்ற, வேறு வழியில்லாமல் அந்த பறவையும் குரங்கிடம் சென்றது.


இனியும் அதை வெறுப்பேற்ற நினைக்காத குரங்கு, அதனிடம் ஒரு நிபந்தனை வைத்தது. அந்த பறவை எதையும் சரியாக உண்ணாததால் இனி கூட்டத்தோடு இணைந்து உண்டு வாழ்ந்தால் மட்டுமே தன் கையிலுள்ள பொருளை காண்பிப்பதாக சொல்ல, அதற்கு இசைந்த பறவையிடம் அந்த கருவியையும் தன் புகைப்படத்தையும் காண்பித்தது குரங்கு. 



ஒரு நிமிடம் அசந்து போன பறவை தன்னிடம் கருவியை தருமாறு கேட்க, குரங்கு ஒப்புக் கொண்டாலும் ஒரு பழத்தை அப்பறவையிடம் நீட்டி சாப்பிட சொன்னது. வேறு வழியில்லாமல் குரங்கு கொடுத்த பழத்தை வாங்கி சுவைப்பதற்குள் சேட்டைக்கார குரங்கு அந்த பழத்தை பறவையின் அலகிற்குள் திணித்துவிட்டது. குரங்கு ஒரு கையில் புகைப்பட கருவி வைத்துகொண்டு இருந்த வேளையில் மறுபடியும் பொத்தான் தானாகவே அழுந்த, பறவை , பழம் உண்ணும் காட்சி பதிவாகியது. ஆனால் அழகான சிறிய அலகை கொண்ட பறவைக்கு பாதி பழம் உள்ளே சென்ற நிலையில் அதன் அழகு பெரிய அளவில் புகைப்படத்தில் பதிவாக குரங்கு, பறவையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது. அது புகைப்படம் என்பது அவைகளுக்கு தெரியாத போதும் பறவையை ஒரு பழத்தை ஏமாற்றி சுவைக்க வைத்த குரங்கின் முயற்சி வெற்றியே!

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...