நீளும் கேள்விகள்..
நீங்கா விடை தேடியே ..
நம் -
பிறப்புக்கும் ..
இறப்புக்கும் ..
மத்தியிலான இப்பயணம்...!..
நேர்மறை
எதிர்மறை..
என ரெண்டையும் ..
நேர்காணல் காணவே ..
ஆயத்தம் ஆனோம் ..
இப்பிறவியில்...!!..
மீண்டும்..
மறுப் பிறவி தொடர்வோமா..
இல்லையா ?!..
என்பது புதிரே இங்கே !...
இருப்பவனுக்கும்
இல்லாதவனுக்கும்
பாரபட்சம் காட்டாது ..
இங்கே நம் வாழ்க்கை !..
எல்லாம் ..
நேரலையில் தான்
அனுபவித்து
தெளிய வேண்டும்...!..
முன் கூட்டி ..
யாருக்கும் இங்கே -
வினாத்தாள்..
சாத்தியம் இல்லையே..!..
உப்பு..
காரம் ..
இனிப்பு ..
புளிப்பு..
கசப்பு..
உவர்ப்பு..
என்பது போல்
தான் ...
அத்தனையையும்..
ரசிக்க ருசிக்க
லயிக்க ..
வந்தோம்..!
செல்வோம்..!
நடுவில் - கொஞ்சமாவது..
நம்
பாத்திரம் புரிந்து..
பத்திரமாய் ..
வாழ்ந்திடுவோம்...
நல் வாழ்வை..
நல் விதமாய்..!..
நாலு பேரு மெச்ச ...
மட்டும் இல்லை..
நாலு பேரு..
தூற்றாதபடியும் !!...
வாழ்க்கை ..
வாழ்வதற்கு தானே !....
☺️☺️☺️

No comments:
Post a Comment