Sunday, April 14, 2024

காஸ்பியன் கடலை தேடி by Vidhya Nivash




எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பயணம் என்றாலும்கூட, புது தேசம்,மொழி,உணவு என எண்ணிலடங்காத கேள்விகளுடன் தொடங்கிய பயணம்.

மின்விளக்கில் மிளிரிய நகரமும்,கட்டிடங்களும் படை சூழ.வாகனத்திருந்து இறங்கியவுடனே குளிர் ஜவ்வாக ஒட்டிக்கொள்ள ,சூடான இடத்தை தேடி மனம் ஓட.குளிரில் உறைந்த உடலை சிலிர்க்க செய்த அற்புதமான காட்சி.(Highland park,Baku)

ஈர காற்றில் யாரோ குழல் எடுத்து பாட.பனியும் ,மேகமும் கட்டிடங்களை முத்தமிட்டு செல்ல ஒரு புறம்.மறுபுறம் பரந்து விரிந்த காஸ்பியன் கடல் இருட்டில் கண்ணாம்மூச்சி ஆட.இதற்கு தானே காத்திருந்தாயா பாலகுமாரி என மனம் பாட.

உடலோ புது சூழலுக்கேற்ப ஒத்துழைக்க மறுக்க,பசி வயிற்றை கிள்ள. உணவகத்தை தேடி வாகனம் படையெடுத்து செல்ல.

அங்கு பரிமாற்றப்பட்ட ரொட்டியும்,தேநீரும் குளிருக்கு இதமான உறக்கத்தை தர .கண்சிமிட்டும் மின்விளக்கின் மத்தியில் இருந்த மெத்தை அழைக்க கழிந்த முதல் நாள் பயணம்.

மீண்டும் பயணத்தில் இணைவோம்.... 





1 comment:

  1. சொல்லும் போதே நானும் பயணித்த உணர்வு வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...