Wednesday, April 17, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


அவன் தேவையை பூர்த்தி செய்த

 திருப்தியுடன் அவள்

தீராத ஆசையில் அவன்

அந்த விளைவில்

பிள்ளையை போராடி 

பெற்றெடுத்த அவள்

தன் ஆண்மையை நிரூபித்த அவன்

வளர துடிக்கும் சிசுவின் 

தவிப்பில் அவள் 

தன்னை ஆடுவாசப்படுத்த யாருமின்றி அவள்

நிலவு தேயவும் வளரவும் கண்ட அவன்

நாட்கள் நகர்ந்ததாய் பூரிப்பில் அவள்

அடுத்த பாணம் தொடுத்தான் அவன்

ஒன்றை தீர்க்கமாய் வளர்ப்போம் என்றாள் அவள்

ஒன்றுக்கொன்று துணை வேண்டும் என்றான் அவன்

மனம் மாறி, நிச்சயம் உண்டு என்றாள் அவள்

அவன் நெஞ்சில் கை வைத்து

பின் என்ன, கைகள் கோர்க்க

ஆனந்தம் கொண்டு நாட்கள் வளர

வந்தது மீண்டும் ஓர் புது வரவு

மீண்டும் மீண்டும் அதே தேவை 

துளிர்க்க, தடை போட்டது மருத்துவம் அறிவியல் முறையில்

இன்னும் சிறப்பானது

வசந்தமானது ஆணின் ஆசைக்கும் தேவைக்கும் பெண்ணானவள்

பொதிந்து வைத்த தன் அழகில் விழுந்த அவனை எழுப்பும்

 முயற்சியில் அவள்

கண்டாள் தோல்வியை என்றென்றும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...