Thursday, November 21, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


கண்ணம்மாவை பாடிய பாரதியும் கையில் கோலுடன் நின்றானே!


பெண்ணும் நிமிர்ந்து நடக்க வேண்டியே நிரம்ப ஆவல் கொண்டானே!


நிதர்சனம் பேசிய அவனையும் காலன் சீக்கிரம் அழைத்துக் கொண்டானே!


காலம் உள்ள வரை நினைப்பாள் எப்பெண்ணும் அவனையுமே!


இயல்பாய் பெண் விடுதலை பேசி மனதில் அழகாய் புகுந்தானே!


பாரதத்தின் விடுதலை எண்ணி அவனும் எதிலும் விடுதலை வாங்கி சென்றானே!


கவி பாடியே அவனும் வளமை பொதிந்த 

பாரதத்தை உலகறிய

செய்தானே!


நேர் கொண்ட பார்வையுடனே 

சீராய் நடக்க வழி செப்பினானே!


காகிதத்தில் தன் எண்ணத்தை திமிராய், அழகாய் நிரப்பினானே!


எங்கும் கிடைக்கா அவனை போல் இன்னொரு மனிதருமே!


உயிர் உள்ள வரை அவனை நிறைவாய் போற்றுவோமே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...