Thursday, November 7, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கரையும் உடல்களின் ஊடே

உருகும் தோழமை 

சிரத்தில் உஷ்ணம் என்றாலும்

கரத்தில் அணைப்பு

சிறந்து விளங்கும் வாழ்க்கையில்

மறந்து போன பழமை

தளர்ந்த கால்களுக்கிடையே

மீண்டும் 

வளர்ந்த நட்பு


 வணங்காமுடிகள் இங்கே

 நாவில் மட்டும் புன்னகை

வார்த்தைகளில் இனிமை


 உருகியது நீயும் நானும் என்றாலும்

தழைத்தது நம் குடும்பம்

பிறர் மனதை கவர அரசனாக வேண்டாம்

அசுரனாக வேண்டாம்

சுடராய் இருந்தால் போதும்

வலிமையுள்ள தீயாய் அல்லாமல் 

 தீபமாய் மாற வாழ்வு

நம் வசம்


உருகி பேசுவதில் யாரும் சளைத்தவரல்ல 

உதிரம் தேய கொண்ட உழைப்பில்

உறுதியோடு இறுதி வரை

கொள்ளும் நட்பே சிறப்பு


 ஏற்றிய சுடர் ஒளி கொடுத்தாலும்

தன் உயரத்தை குறைத்துக் கொண்டாலும்

களம் காணவே விரும்புகிறது

காற்றின் வேகத்தில்

தன் அழிவைக் கூட

எண்ணாமல்

சுடராக மாறி பிறருக்கு

ஒளி கொடுப்பதும் சிறப்பே

எனினும் அதன் சிறு வடிவம் மட்டுமே அழகு

பெருந்தீயாய் மாறி உடமையை அழிக்காமல் உள்ளவரை


 தலைமை யாருக்கென மோதிக் கொண்டாலும் 

அடுத்தவருக்கு வாழ்த்து சொல்லி 

போட்டியாளர் ஒருவரை ஒருவர் தழுவும் தருணம், 

வெற்றி யாருக்கென்றாலும் இது சொல்லும் அவர்களின் பண்பை


 உருகும் மெழுகிடம் உள்ள பண்பு

மனிதனிடம் காண முடியவில்லையே!

அப்படிப்பட்ட மனிதன் உருவாக்கிய பொருளில் மனிதநேயம் எதிர்பார்ப்பது சரியோ?

தன்னால் முடியாததை தான் தயாரித்த பொருளில்

தியாகத்தை புகுத்தினான்.

இதுவும் விந்தையே!

உயிர்த்தியாகம் செய்த மெழுகும்

தான் உதிர்த்த மெழுகு நீரில்

சில மணித்துளிகள்

உயிர் கொள்வது போல

மனிதரில் சிலரும் உண்டு

என்பதும் நிஜமே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...