விழியோரம் கண்ணீர்
இதில் ஆண் பெண் பேதமில்லை
ஆணின் கண்ணீரோ தெரியாமல்
பெண்ணின் கண்ணீரோ மறைக்கப்படாமல்
மறைக்க தெரியாத வடுக்களால்
இந்த விழியின் கண்ணீரும் வீண் தானோ?
உப்பு கரிப்பதால்
தூங்கும் இதயங்களால்
தவிக்கும் சூழலால்
துடிக்கும் கரமில்லாததால்
துடைக்க. தெரியாததால்
தாங்கும் மனமில்லாததால்
வலியை அறியாததால்
யாருமறியா வேளையில் வரும்
கண்ணீர் கூட
விளக்கமறியாது
விடையறியாது
தேற்றுதல் கொள்ளாது
ஆகையால் பெண்ணே!
நீயும் அடுத்தவர் முன் கண்ணீர் விடு!
உன் மீ து அன்பு கொண்டவர் எவர்
என அறிய,
நீ உண்மையில் திடம்
உள்ளவள் என தெரிய,
அதுவும் முதலைக் கண்ணீராய் மட்டுமல்லாமல்
இரக்கத்தை வேண்டும் கருவியல்ல இது
இறந்த பின்னும் பிறர்
நாடும் கருவிழியே இது
கண்ணீருக்கான காரணம் அறியாது விழிகள்
செந்நீராராய் மாறவும் தூண்டும் மனதின் வலிகள்
தூங்கவும் விடாது பிறக்கும் துளிகள்
தாங்கவும் முடியாது தவிப்பில் கிளிகள்

No comments:
Post a Comment