Monday, November 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


இரு கூர்முனைகள் ஓர் காதலை பிரிக்கும் முயற்சியில்

 தேவையின் நிகழ்வு முடிந்தவுடன்

உதறி விடும் மனிதனை

வெட்டி எறியும் பந்தம்

 ஒன்றை துண்டித்துப் பார்

அதன் அர்த்தம் விளங்கும். 

அது 


பகையோ? வருவது பேச்சால் 


நட்போ? மலர்வது உறவால் 


காதலோ? பிறப்பது ஆவலால் 


ஊடலோ? பரிமாற்றத்தின் செயலால்


பிரிவோ? தெளிவாய் பகிரராததால் 


அதிர்ஷ்டமோ? காலம் சிறப்பதால்


ஆவலோ? துண்டானதை இணைப்பதால்


துக்கமோ? கண்ணீர் அறியாததால் 


இன்பமோ? பகைவன் அடையாளமானதால் 


எதுவும் எளிதே இரண்டாக்குவது

கடினமே என்றும் 

கோர்வையாய் இணைப்பது


இணைந்திருப்போம் கத்தரி போலே

மத்தியில் உள்ள

அன்பு எனும் திருகாணி சரியாய் உள்ள வரை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...