Saturday, November 9, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


உழைப்பின் வெற்றி முயற்சியில் என்றாலும் 

அதன் ரகசியம் உண்மையில் 

அதனை அடைய எதிர்வரும் இடர்களை தாங்குவதிலே


இரு கரங்கள் காணா வேளையில்

இரு கால்கள் உதவும்

பாரத்தை எளிதாக பற்றி தாங்க


தன் புற்றை அடைத்து

விடும் என்ற அச்சத்தில்

தன் குடும்பத்தை காக்க வேண்டி

ஒற்றைக் கல்லை 

ஒற்றை பூச்சியாய் இருந்து தாங்கும் எறும்பின் முயற்சி

அழகே!

அறிவே!

சிறப்பே!


குடும்ப பொருளாதாரத்தை பெருக்க சுமக்கிறான் பொதியை

பிள்ளைகளை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்கிறான் 

பாவம் அவன் பொருளாதாரமே அடகு போகிறது

பிள்ளைகளின் கல்விக்காக

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...