Monday, November 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


பிரசுவிப்பவள் மனம்

 கொள்ளை கொள்ள

இதமாய் ஓர் அணைப்பு 

பூப்பவை அனைத்தும் பலன் வேண்டியே இருக்க பெற்றெடுப்பவள் 

உடல் இறுகியது 

சுகப்பிரசவத்தை எண்ணி

யாருமில்லா நேரத்தில் பூப்பதும்

எவருமறியா வித்தையே 

அதுவும் இயற்கையின் விந்தையே!

குருதி வெளிவராமல் 

நடக்கும் பிரசவத்தில்

குறையும் சில சமயம் காணுமே!

கூடு கட்டி வாழும் பறவைக்கிடையே 

அமைதியாய் அரங்கேறுமே!

ஒற்றைப் பிரசவத்தில்

காணும் 

ஓராயிரம் வித்துக்கள்

அடுத்த தலைமுறை

 நோக்கியே பயணம்

வருவது தெரியும்

போவது தெரியும்

வளர்வது மட்டும் மாயையே!

பூக்கள், காய்கள், பழங்கள் என்றான பின்

முத்தியில்லை முதிர்ச்சியே!

வாழும் கலைகளுக்கிடையே 

செழிக்கும் கலையும் இதுவே!


 வருடா வருடம் பிரசிவிப்பாள் இவள் கொத்து கொத்தாய்

இவளை சுற்றி சுற்றி ஓடி விளையாடுவதாலே 

அவளும் வீழ்ந்து விடவில்லை 

வளைகாப்பு கூட நடத்தாமல் சுகப் பிரசவம் ஆகுதே


 தாய்மையும் உண்டு பூப்பதாலே 

ஆனந்தமும் உண்டு குளிர்ச்சியாலே

வரிகளும் உண்டு முதுமையினாலே

பந்தமும் உண்டு தொப்புள் கொடி இல்லாமலே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...