ஒரு
பெண்ணின்
மனதிற்குள்
எப்போதும் -
உண்டு ..
ஓர் ..
தீரா பேராசை ..!..
அவள் -
கனவில்
அழுதால் கூட
அது -
அவன் ..
காதில்
விழ வேண்டும்..!..
அவள் -
மௌனத்தை
அவன் மட்டும்
மொழி பெயர்க்க
வேண்டும்..!..
அவள்
எப்படி
அவனுக்கு
உண்மையாக இருக்கிறாளோ...
அதே போல்
அவனும்
இருந்திட வேண்டும்..!..
வேண்டுவன எல்லாம்
கிடைக்கா விட்டாலும்...
பரவாயில்லை .!..
வேண்டாதவை மட்டும்
கிடைக்காமலே
போகட்டும்!..
இதுவே
அவள் -
மன விருப்பம்...!!!...
- Kiruthika
Veena Shankar: முற்போக்கானவள் என்றும் அவள்
முயற்சியை மேற்கொள்பவள் அவள்
முதிர்ச்சியால் வெல்லுபவள் அவள்
முதுகெலும்பு வீட்டில் அவள்
முடியாது என்றுரைக்காதவள் அவள்
முடிவை நோக்கி பயணிப்பவள் அவள்
முட்டுக்கட்டையை தகர்ப்பவள் அவள்
முண்டாசுக்கவியின் வழி அவள்
முத்திரை பதிப்பவள் அவள்
முகத்திரை தவிர்ப்பவள் அவள்
முடிவில்லா பாதை அவள்
முழுமையும் கொண்டவள் அவள்
முதுமொழி ஏற்பவள் அவள்
முத்தாய்ப்பாய் இருப்பவள் அவள்
முற்றிலும் உண்மை இது
முயன்று பாருங்கள் அவள் வழியில்
Shanmugapriya: வெள்ளை நிறம் ஆன்மீக பற்றையும்
சிகப்பு நிறம் அவளின் சக்தியையும்
நீல நிறம் அவளின் லட்சியத்தையும்
பச்சை நிறம் அவளின் அமைதியையும்
இளஞ்சிவப்பு அவளின் அன்பையும்
என்னத்துக்கு ஏற்றது போல்
முகத்தில் மின்னிக் கொண்டிருந்தது
அவள் ஒரு முக்கோண பட்டகம்
---பிரியா
ஓவியம் வரைய காகிதம்
இல்லையோ!
அவளே ஒரு ஓவியம்
அவளையை யார் சிலையாக்கி
சிறைப்பிடித்தது !
மாய வண்ணங்கள் தாங்கிய
முகத்தில் கண்ணங்கள்
சிவக்கலாம்,முகம் மலருமா!
வெட்கத்தில் குனியும் தலை
இங்கே மனவேதனையில்
குனிந்தது ஏன்?
காட்சிப் பொருள் இல்லை அவள்!
பார்த்தவுடன்
தோற்றத்தில்,சொல்லில் ஈர்க்கும்
காந்தம் அவள்!
- வித்யா

No comments:
Post a Comment