Wednesday, November 20, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 எடைக்கு போய் விடுவானோ என்ற அச்சத்தில்

இதயத்தை பூட்டி வைத்த மூளை


 இவரில் எவர் செயல் 

இழந்தாலும் 

மனித எண்ணிக்கையில் ஒன்று குறைவே


 குருதி பாயும் இதயம்

உறுதி கொண்டால்

சாவியும் தேவையில்லை

மூளையும் தேவையில்லை

மனித உடலை விட்டு பிரிய


 இதயம் இல்லாதவன்

இத மாற்று சிகிச்சைக்காக

காத்து நிற்கிறான்

மருத்துவமனையில்


 மருத்துவமனையில் இதயம் வேண்டி

நிற்பவருக்காக 

பூட்டி வைத்தது மூளை

இதயமில்லாத மனிதன் யாரும்

பணத்திற்காக இன்னொருவருக்கு

கொடுக்காமல் இருப்பதற்கு

இதய மாற்று சிகிச்சை  

இங்கே பண்டமாற்று முறையாக இல்லாமல்

மூளையுள்ள மனிதனால் 

காத்து நிற்கிறது

கூண்டிற்குள்ளே

- Veena 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...