Saturday, November 16, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


என் வாழ்க்கையின் பாதைகளில்

கற்களும் முட்களும் மிகுதி 

இந்தக் கூரிய உலோகங்கள் 

ஒன்றும் என் மனதை

அவ்வளவு சுலபமாக 

சிதைத்து விட முடியாது 

கூர்மை இல்லாத நாக்கே 

பலமுறை என்னை 

கூறு போட்டதுண்டு 

அந்த ஆயுதத்தை

 பயன்படுத்தி விடாதீர் !!!


(நாங்கல்லாம் பிரச்சனையை போர்வையா போத்திட்டு தூங்குறவங்க ஓரமா போவியா)


--பிரியா


Veena Shankar: 

இயற்கை கொடுத்த பாதையும்

 மனிதனின் நடையும் இயந்திரமானது 

அவன் தன் வாழ்க்கையின்

தேடலுக்கான ஓட்டத்தால்

 Veena Shankar: இறுக்கத்திற்காக ஆணியும் 

அதை தளர்த்துவதற்காக உள்ள கருவியும்

அவசியமாகிறது மனிதனின் நடைக்காக

 Veena Shankar: ஓட்டத்தின் அவசியம் பொறுத்தே

வாழ்வில் உண்டு ஆட்டம்

வாட்டமாய் இருக்கும் மனதிற்கும்

தேவையாகிறது ஊட்டம் 

காட்டமாய் இல்லாமல் இருந்தால்

பயணத்தில் உண்டு கொண்டாட்டம் 

திட்டம் தீட்டி வாழ்ந்தால் 

இல்லை என்றும் திண்டாட்டம்

Veena Shankar: வலியே வழியாகும் போது 

கடக்கும் யாவும் அற்பமே!

வலியது யாதும் என்றுணர 

வலியும் அற்பமே!

வல்லமை உள்ள நெஞ்சிற்கு ஏதும் அற்பமே!

வல்லவன் எவனோ அவனுக்கு எல்லாம் அற்பமே!

Vidhya:

கலைஞனுக்கு புல்லும் போதும்

 காவியம் படைக்க!

இங்கே இரும்பே துரும்பாக

 கொட்டிக்கிடக்க அவனுக்கு கலை

 படைக்க எம்மாத்திரம்!

 காலின் வலிமையைவிட

 மனதின் வலிமை அதிகம்,

காலில் வரும் ஆணிகளை

 பிடுங்க பிடுங்க

 முளைக்கிறது,அதற்கு

 ஆணியே செருப்பாக

 அணிந்தால் என்ன!


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...