Tuesday, November 19, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 கல்யாண வீட்டு சாப்பாடு 

உண்டவருக்கு திருப்தி பதார்த்தங்கள் நன்றாக இருக்கும் வரை

எச்சில் இலையில் மிச்சம் வைத்தாலும் மகிழ்ச்சியே 

குப்பைத் தொட்டி அருகே

எச்சில் இலைக்கு

காத்திருக்கும் அன்பருக்கு


 வீணாகும் பாதார்த்தமும்

தேவையுள்ளோருக்கு 

யதார்த்தமாய் சேர்ந்தால் சிறப்பே

குதர்க்கமான பேச்சு

வந்தாலும்

குளிர்ச்சியாய் வயிறு நிரம்புமே


 இலைக்கு இவ்வளவு

காசு என்று நிர்ணயித்த பின்னால்

பதார்த்தங்கள் நிரம்பின இலையில்

அவரவர் ஆடம்பரத்திற்கேற்ப

உணவும் மிஞ்சின

தூக்கியும் வீசப்பட்டன

பல மனிதர்களின்

பட்டினியை அறியாது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...