Thursday, November 21, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya



 Veena Shankar: தியாகம் எனும் சுடரில் மறைக்கப்பட்டிருப்பது கணவன் மனைவியின் புரிதலே

Veena Shankar: தீபத்தை ஏற்றுவது பெண் என்றாலும்

அதில் கரைபவன் ஆண் கூட தான்

Veena Shankar: நீரும் நெருப்பும் பற்றிக் கொள்ளுமா?

நீர் எது ? நெருப்பு எது?

நீரும் தணிக்கும் நெருப்பை

நெருப்பும் தணியும்

நீரால்

தட்டிக் கொடுத்து விட்டுக் கொடுக்கும் யாவும்

தரு போல் வளரும் மேன்மையால்

தருவின் பக்க கிளைகள் களைய 

பருமனோடு வளர்ச்சி

தரும் தருவும்

வாழ்வும் அதுவே அவசியமுள்ளத கொண்டு

பிற களைய மனதும் உடலும் வலுப்பெறும்

தெளிய வேண்டியவை பல இருக்க

நீயா? நானா? என்ற

தர்க்கமும் வேண்டுமோ?

தாக்குதல் பேச்சில்

ஆக்கும் வெறுப்பே!

வென்ற பின் அடையும் மமதையும் 

தோற்ற பின் எழும்

உத்வேகமும்

அணையும் நெருப்பு போல் இல்லாமல்

அணைக்கும் நீர் போல் திகழ்வது அறிவே!

 Veena Shankar: உடல் கருகினாலும் ஒளி தரும் இதுவே

அது சுடரன்றி வேறு எதுவே

Veena Shankar: யாரும் உற்று நோக்காத செயல்

உருகுவது மெழுகின் தியாகச் செயல்

உருக்க வைப்பது தெய்வத்தின் செயல்

சுடரும் அதன் வெளிச்சத்தில் 

உயிர் பெறும் 

செயலே ஆக்கத்தின் வெற்றி

Vidhya:

தியாகத்தின் தீபச்சுடர் ,கடைசி நுனி வரை எரிய தன்னையும் தந்தாள் தாய்!

தாயையும்,தந்தையும்,மனைவியும் கணவனும் மட்டுமே உலகறியும் பல நேரம் மறந்த உண்மை, சகோதரிகள்,சகோதர்கள்,நண்பர்கள் கூட தீபச்சுடரே!

ஒரு சமுதாயை உயர்த்த தேவையென்றால் தன்னையும் தரும் மாமனிதர்,  கூடவே துணைக்கு வரும் தோழர்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...