கண்ணீருக்கூட ரகங்கள் உண்டு இங்கே!
மதிப்பில்லாத கண்ணீர் தாய்,மனைவி சில நேரம் மகள்!
தோழி ,தோழன்,காதலியின் கண்ணீர் மழைநீர்!
பேச வழியில்லாமல் வரும் கண்ணீர் மறுக்கப்படும்!
வலியில் வரும் கண்ணீர் சில நேரம் துடைக்கப்படும் !
மனபாரத்தில் வரும் கண்ணீர் யாரும் அறிந்தும் அறியாதது!
கொண்டாடபடுவது ஆனந்த கண்ணீர்!
மனதை கரைய வைப்பது சேயின் கண்ணீர்!
மனதைகலங்க வைப்பது கணவனின் கண்ணீர்!
நெஞ்சை அடைப்பது எந்த
கண்ணீர்??
- வித்யா
பிறக்கும் வரை வலி, சோகம்
விழியோரம் கண்ணீர்
எதிலும் யாவருக்கும்
பிறந்த பின் சுகமே!
வழியும் வலியோடு பிறப்பதால்
விழி மட்டுமே வலி அறியும்
கண்ணீர் அறியா!
காண்போருக்கும் கண்ணீர் மட்டுமே தெரியும்
விழியின் வலி அறியாது
அதுவும் தன்னாலே
பிறந்தது என்றும்
ஏற்றுக்கொள்ள
மனம் வாராது
- வீணா
கண்ணீரை ...
எவர் துடைக்க ..
கண்கள் ஏங்குதோ...!..
அவரே தான் -
கண்ணீர் தந்ததும் ..
என்பது தான்
இங்கே -
இதயம்
தாங்கா...தூங்கா
வலி...!...
பரவாயில்லை ..!..
கொஞ்ச நேரம்
விழி வியர்க்கட்டும்...!..
அப்போதுதான்
வலிமை கூடும்..
புது -
வழிப் பிறக்கும். .!...
- கிருத்திகா
இழந்த இதயத்தை
எந்த வீணையில் மீட்டுவது
மங்கள வாத்தியம் என்
வாழ்வில் இல்லையா ?
நான் வசிக்கும் போது
ஹார்மோனியத்தில்
அழுகையின் குரல்
பக்கவாத்தியமும்
பக்கத்தில் இல்லை
நரம்புக் கருவிகள் என்னை
சிறை பிடித்த ஆலமர வேர்
துளைக் கருவிகள் என்
தூக்கத்தை கேடுகின்றது
தோற்கருவிகள் என்
தொடுஉணர்வை சோதிக்கிறது
கன கருவிகள் என்
மனதை கனக்க வைக்கிறது
எழுபத்தி இரண்டு மேளகர்த்தாவில்
என் சோக கீதம் எது ?
ஆதார ஸ்ருதியேய்
என் சோக கீதத்துக்கு
ஆரோகணம் அவரோகணம்
அமைத்து தா !
-----பிரியா

No comments:
Post a Comment