Tuesday, November 12, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 அதிகம் பேசும் நாவினை மட்டும் தைக்க தெரியாத இணை


 இணை பிரியா நண்பர்களின் கூட்டு முயற்சியில் பொலிவு

 பெறும் ஆடைகள் யாவும்


தனித்திருப்பது பிடிக்காது எப்போதும் ஜோடி சேரும் உறவுகள்

வெற்றிலை பாக்கு போலே 


சுடும் வார்த்தைகளுக்கு ஊசியும் 


ஆடையின் தரத்திற்கு நூலும் உவமையானதும் இங்கேயே


கூர் முனை செய்யும் தவறினால் கொண்ட கிழிசலையும் 


அதை கட்டி காத்து அணைத்து மூட நினைக்கும் நூலும்


உள்ளவரை கிழிசல்கள் இல்லை


ஆடையின் கிழிசல்கள் அடைபடுவதும்


தேவையுள்ள இடத்தில் பொத்தானுக்காக

கிழிந்து தைப்பதும்

உண்டு தானே ஆடையின் வடிவத்தில்


தாகம் தீர்க்கும் நீர் போலே அங்கம் மறைக்கும் கூட்டணியின் முயற்சி

உலகில் எவருக்கும் தேவையே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...