Thursday, April 11, 2024

பிறப்பு எதற்கு by Veena Shankar

 


பிறப்பு எதற்கு?


இன்பத்தை ரசிக்கவா?


துன்பத்தை அறியவா?


பாசத்தை கொடுக்கவா?


அடுத்தவனை கெடுக்கவா?


பக்தியில் திளைக்கவா?


பாதியில் தவிக்கவா?


தூக்கத்தை மறக்கவா?


துக்கத்தை பகிரவா?


உழைப்பை பெருக்கவா?


செல்வத்தை தொலைக்கவா?


வந்ததை ஏற்கவா?


வாராதை நினைக்கவா?


கொண்டதை காக்கவா?


கொடுப்பதை தவிர்க்கவா?


கனவை மறக்கவா?


நினைவை இழக்கவா?


மனிதம் போற்றவா?


மனதை எதிர்க்கவா?


வசதியை கூட்டவா?


அசதியை பொறுக்கவா?


அன்பை தொலைக்கவா? 


அகந்தையை அழிக்கவா?


நட்பை தேடவா?


உச்சியை தொடவா? 


மீண்டும் முயற்சி கொண்டு பிறக்கவா?


பாவம் தொலைந்தது என விடவா?


புசித்த பின் அடங்கும் பசி போலே


பிறப்பும் வேண்டுமே நம்மை படைத்தவன் சுகமாய் விளையாட

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...