Tuesday, July 11, 2023

அடக்கத்தின் சின்னம் பொறுமையே by Veena Shankar

 


கணவரின் தலைப்பிற்காக பொறுமையோடு

 எழுதியது - "பொறுமை"


அடக்கத்தின் சின்னமும் பொறுமையே!


ஆக்கத்தின் முயற்சியும்

பொறுமையே!


இரக்கத்திற்கு சொந்தமாவதும் பொறுமையே!


ஈர்க்கும் குணமும் வேண்டுவதே பொறுமையே!


உதிரம் சிந்தினாலும் முடியுமோ?


ஊக்கம் கொள்ள செய்தாலும் கடைபிடிக்க இயலுமோ? பொறுமையை 


எதிர்வாதம் செய்யாமல் நம் நாளும் முடியுமோ? அதுவும் அரிதே!


ஏனோ மனமே! பொறுமையை இழக்கிறாய் உன்னுள்ளே ?


ஐம்புலன்களை அடக்கி காப்பது தானே பொறுமை?


ஒன்றல்ல இரண்டல்ல தருணங்கள் பொறுமை வெளிப்பட


ஓங்குதல் இருந்தால் மறையுமே இந்த பொறுமையுமே!


பொறாமையோடு சொல்ல விழைகிறேன் நானும் பின்னாளில் பொறுமையின் சிகரம் நானும் என்று


கடைபிடிக்க முயல்கிறேன் முடியுமா அது?

5 comments:

  1. சினம் வஞ்சம் புகழ்ச்சி தற்பெருமை இது எல்லாம் நம்ம தவிர்க்கணும்னா கண்டிப்பா நம்ம என்னத்த கவனிக்கணும் எந்த எண்ணம் வேணும் எந்த எண்ணம் வேண்டாம் அப்படின்னு ஒரு தெளிவு இருந்தது என்றால் சினம் தவிர்க்கலாம் இதைத்தான் மகரிஷி வேதாத்திரி சொல்லிருக்காரு
    --அருமை சகோ
    எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க எங்களுக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அண்ணாந்து பார்க்கையில்
    சட்டென்று முகத்தில் ஒரு நீர்த்துளி
    அது மழைத்துளி குளிர்ந்த காற்று என் மேல்
    மோதி செல்கிறது

    அந்தப் பள்ளத்தாக்கில் குயிலொன்று கூவிய சத்தம்
    பாறைகளில் மோதி மோதி பவனி வந்து கொண்டிருந்தது

    மாலை நேரத்தில் கார் மேகம் சூழ
    அன்று அந்திமாலை விடுப்பில் இருந்தது
    நேரம் ஆக ஆக சில்லென்று மழைத்துளி என் மேல்
    நனைத்தும் நனைக்காத வாறு

    என் மேனி மிருதுவான வெப்பத்தை நோக்கி
    மனம் அலைய சட்டென்று தோன்றுகிறாள்
    என்னுள் உள்ளவள்

    கை கோர்த்து நடந்தோம்
    குளிர் என்னை விட்டு விலகி பத்தடி தள்ளி நின்றது

    இப்பொழுது அப்படி ஒரு உஷ்ணம்
    கை கோர்த்தவாறு பாதை எங்கு போகிறது
    என்று தெரியாமல்
    கால் ஒரு பக்கம் போக
    மனம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது

    களிப்பில் வார்த்தை தொண்டையில்
    மீன் முள் போல் சிக்கிக்கொள்ள

    ஆதிமொழி, விழி மொழி
    எண்ணத்தை கடத்துதல் போன்று
    வார்த்தை கூடு விட்டு கூடு பாய்ந்தது

    அந்த இரவு அப்படியே நீளாதா
    என்று தோன்றியது அப்போதுதான்
    சூரியன் மேல் எனக்கு வெறுப்பு தோன்றியது

    அவள் அருகில் தோளோடு தோள் உரச

    சட்டென்று அப்பா மின்விசிறி அணைக்க
    அம்மா இன்னுமா தூங்குற டேய் எந்திரி

    ---சின்னா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா உணர்ச்சிபூர்வமான கதையில் காலையும் அப்பா என்னும் காளையும். நினைத்து பார்க்கா கனவும் அதை கலைத்த ஆசிரியரும். அருமை நண்பரே

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...