Tuesday, July 11, 2023

சிந்திக்க தெரியவில்லை by Vidhya Nivash

 கண்கள் குளமாவது ஏன்? 

வலியா? இயலாமையா?

தன்னை யாரும் சுட்டிக்காட்ட

 வலிக்கிறதா?

தனிமையா? பயமா?

சுகமான வாழ்க்கை போராட்டமாக

 மாறினால் பயமா?

நினைத்தது கிடைக்காத போது வரும்

 கோபத்தின் எல்லை என்ன? அதை

 கையாளுவது எப்படி? 

தன்மையாக பேசு என்கிறோம்

 நடப்பது எப்படி?

 சிறு குழந்தை சொல்ல கேட்க புத்தி

 உரைக்கிறதே !





இந்த கார் மேகம் கூடி அழுது கொட்ட

 காத்திருக்க யாரோ வந்து

 குடைப்பிடிக்க வந்த திசை போய் ஓரே

 புழுக்கமாக புழுங்குதே அதற்கு

 அழுகையே மேல்

10 comments:

  1. அருமை வித்யா

    ReplyDelete
  2. மிக அருமை தோழி

    ReplyDelete
  3. நன்றி கிருத்திகா

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அருமை வித்யா கார்மேகம் என்ற உடனே நான் எழுதினது எனக்கு ஞாபகம் வந்தது

    ReplyDelete
  7. அண்ணாந்து பார்க்கையில்
    சட்டென்று முகத்தில் ஒரு நீர்த்துளி
    அது மழைத்துளி குளிர்ந்த காற்று என் மேல்
    மோதி செல்கிறது

    அந்தப் பள்ளத்தாக்கில் குயிலொன்று கூவிய சத்தம்
    பாறைகளில் மோதி மோதி பவனி வந்து கொண்டிருந்தது

    மாலை நேரத்தில் கார் மேகம் சூழ
    அன்று அந்திமாலை விடுப்பில் இருந்தது
    நேரம் ஆக ஆக சில்லென்று மழைத்துளி என் மேல்
    நனைத்தும் நனைக்காத வாறு

    என் மேனி மிருதுவான வெப்பத்தை நோக்கி
    மனம் அலைய சட்டென்று தோன்றுகிறாள்
    என்னுள் உள்ளவள்

    கை கோர்த்து நடந்தோம்
    குளிர் என்னை விட்டு விலகி பத்தடி தள்ளி நின்றது

    இப்பொழுது அப்படி ஒரு உஷ்ணம்
    கை கோர்த்தவாறு பாதை எங்கு போகிறது
    என்று தெரியாமல்
    கால் ஒரு பக்கம் போக
    மனம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது

    களிப்பில் வார்த்தை தொண்டையில்
    மீன் முள் போல் சிக்கிக்கொள்ள

    ஆதிமொழி, விழி மொழி
    எண்ணத்தை கடத்துதல் போன்று
    வார்த்தை கூடு விட்டு கூடு பாய்ந்தது

    அந்த இரவு அப்படியே நீளாதா
    என்று தோன்றியது அப்போதுதான்
    சூரியன் மேல் எனக்கு வெறுப்பு தோன்றியது

    அவள் அருகில் தோளோடு தோள் உரச

    சட்டென்று அப்பா மின்விசிறி அணைக்க
    அம்மா இன்னுமா தூங்குற டேய் எந்திரி

    ---சின்னா

    ReplyDelete
  8. அழகு ..கனவு கொஞ்சம் நீளாதா என்று படிப்பவருக்கும்😊 அருமை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...