நிலவிலும் மரம் வளர்த்தது யார்?
மங்கையின் உள்ளத்தைக் களவு
கொண்டதும் யார்?
விடை தெரியாமல் விழிக்கும் இரவில்
ஓர் கனவாய், கன்னியின் மனதில்
நிலவும் ஓர் கள்வனே!
வானத்தை விட்டு நிலவு வெளி வந்தது
பட்ட மரமும் பூ பூத்தது
அவள் கனவும் நிறைவேறியதா?
தனக்கு சுதந்திரம் கிடைத்ததா?
இல்லையா ? என்று தெரியாமலே
காத்திருக்கிறாள் இரவின் மடியில்

அருமை சகோ
ReplyDeleteஅவள் காதல் சொன்ன
பொழுது அவனின் ஓர் கவிதை
நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகாதல் சொன்ன நொடி
ReplyDeleteநான் காற்றில் பறக்கவில்லை
கவிதை பாடவில்லை
கனவில் மிதக்கவில்லை
பேரின்பம் பெற்று
அவள் எண்ணத்தில் இருந்து
வந்த ஒவ்வொரு சொற்களையும்
கொய்து சொல் மழையில்
தேவதையை நனைத்து
துவட்டி நினைத்துக் கொண்டேன்
என் காதல் நிலவு
என் கைகளில்
என் மண வானில்
எப்பொழுதும் முப்பொழுதும்
தேய்பிறையே இல்லாத பௌர்ணமி
அவள்!!!!!!!!!!
--- சின்னா
அருமை
Delete