சதுரங்களின் நடுவே சதிராட்டம் தலைமையை கைப்பற்ற
கட்டங்களின் நடுவே காட்டமான உணர்வு
விளைவு சாய்தல்
போட்டியும் உண்டு, தியாகமும் உண்டு. தற்காத்து கொள்வதும் உண்டு. தவிப்பதும் உண்டு.
வெட்டுவதும் உண்டு.
வெட்டு வாங்குவதும் உண்டு.
வெற்றியும் உண்டு.
தோல்வியும் உண்டு.
நிழலும் உண்டு.
நிஜமும் உண்டு.
அனைத்திற்கும் மேலாக அறிவும் உண்டு,
ஆட்சியை கைப்பற்ற.
தெளிவும் உண்டு,
எனை அறிந்து கொள்ள.
சதுரத்தின் நடுவே ஆடும் ஆட்டமும் அவைகளின் தகுதியையும் பொறுத்தே
புகைப்படம் பொருத்தியவரும் சாய்ந்து விட்டதால் ராணியும் சாய்க்கப்பட்டாளோ?
வீழ்வதும் அவசியமே அடுத்த விளையாட்டில் எழுந்து நிற்க
கறுப்பு வெள்ளை கட்டங்களுக்குள் கறுப்பு வெள்ளை காய்களுக்குள் நடக்கும் ஆட்சி போராட்டம்
சதுரங்கத்தில் ராஜாவை விட ராணிக்கே சக்தி அதிகம் வீழ்த்துவதிலும் ராஜாவை காப்பதிலும்
ராணி சாய்வது புதிதல்ல மயக்கும் ராஜா இருக்கும் வரை

No comments:
Post a Comment