கிணறு
தோண்ட தோண்ட செழுமை
அங்கே கிடைக்கும் தண்ணீரோ
இனிமை
தாகத்தோடு குடித்தால் அருமை
கிடைத்த சுவையில் நான் அடிமை
கோடை காலத்திலும் இல்லை வறுமை
அயல்நாட்டில் காண முடியாத பெருமை
எடுக்க எடுக்க குறையாத வளமை
நெடுநாளைக்கு பிறகு தீண்டினாலும்
உணர்ந்த இளமை
உன்னை கையாள்வதுமே ஓர் திறமை
தீண்டியவர் மட்டுமே உணரும்
பெருமை
ஆட்கள் இல்லாமல் பார்த்ததில்லை
உன் தனிமை
ராட்டினமும் வாளியுமே உன் ஆளுமை
இறைப்போருக்கு தருவது வலிமை
நான் தீண்டாமல் போனாலும் நீ என்
உடைமை

தீண்டாது போனாலும் ..நீ என் உடைமை..வார்த்தை பிரயோகம் மிக அருமை
ReplyDeleteநன்றி கிருத்திகா
Delete